மஹாபயா ஸாதன
சுடுகாட்டில் உள்ள மனித எலும்புகளால் செய்யபட்ட ஆபரணங்களை கழுத்து, கை, காது, தலையில் அணிந்து. முண்ட ஜபமாலையுடன் இரவு சுடுகாட்டிலிருந்து கொண்டு, யந்திரம் கீறி. நாள் ஒன்றிக்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி 7 நாட்கள் ஜபம் செய்து. 8வது நாள் 800 மந்திரம் பயப்படாமல் பிரியமுடன் ஹோமம் செய்ய தேவீயானவள் ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி. இரத்தம் நிரம்பிய கபாலத்தில் அர்க்யம் கொடுக்க அவள் கண்டிப்பாக ஸாதகருக்கு ரஸாயனம் கொடுப்பாள். அதை உண்ட உடனே நரை திரை மூப்பு நீங்கி, மிக்க இளமையோடு நீண்ட ஆயுலும் கிடைக்கும். அவனால் எந்த மலையையும் நகர்த்த கூடிய பலமும் கிடைக்கும்.
மஹாபயா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் மஹாபயா ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம் மஹாபயா, ஆகச்ச - வா, ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் மஹாபbhaயா ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர் செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• கபாலம் - மண்டை ஓடு.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக