அந்தாரஸுந்தரீ ஸாதன
ஒரு தனிமையான இடத்ததிற்கு இரவு சென்று அங்கு யந்த்ரம் வரைந்து, ஒரு சாண் பாவாடையும் சகல ஆபரணங்களும் அணிந்த அழகான அவள் ரூபம் துணியில் கோரோசணமும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகம் கலந்த கலவையால் வரைந்து. குங்கிலியதூபம் போட்டபடி நாள் ஒன்றிக்கு 800 தடவை மந்த்ரம் சொல்ல வேண்டும். இப்படி ஒரு மாதத்திற்கு சொல்லி வந்து, பௌர்ணமி அன்று 800 மந்த்ரம் ஹோமம் செய்ததும், பௌர்ணமி அன்றே அவள் வருகை தருவாள் இதில் எதுவித சந்தேகமுமில்லை அவளுடன் எதுவித கதையும் தொடுக்காமல் கட்டித்தழுவி, அவளுடன் ஸம்போகங்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதமும் செய்துகொண்டு வர வேண்டும். ஆறு மாதங்கள் வரை செய்ய வேண்டும் அதன் பின்னர் தான் இந்த ஸாதனையின் முழுமையான ஸித்தி கிடைக்கும். அவள் ஸாதகருக்கு மனைவியாகி சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பாள். இது ஒரு உன்னதமான ஸாதனையாகும். அவள் ஸாதகரை தன் முதுகில் ஏற்றி மேருமலைக்கு கொண்டு சென்று காட்டுவாள். இரவு நேரத்தில் உலகையே சுற்றிக் காட்டுவாள். அவனின் எதிரிகள் இவ் அகிலத்தில் எங்கு இருந்தாலும் அவர்களை இருந்த இடத்திலிருந்துதே அடுத்த கணத்தில் கொல்ல துனை நிற்பாள். ஆனால் ஒரு நிபந்தனை, ஸாதகர் வேறு எந்த ஒரு பெண்ணையும் விரும்பக் கூடாது. மனைவி அல்லது காதலி இருந்தால், அவர்களை விட்டுவிட்டு. அவன் தன்னை அவளுக்கு முழுமையாக அர்பணித்து வாழவேண்டும். அவள் ஸாதகரின் ஸாதனை உதாசினம் செய்தால் (வராவிட்டாள்) அவள் கொல்லப்படுவாள்.
அந்தாரஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஒம் குணு குஹ்யாகே குணு குணு குஹ்யே ஏஹி ஏஹி குஹ்யாகே ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஒம் குணு, குஹ்யாகே - குகைக்காரியே, குணு குணு, குஹ்யே - மறைந்து வாழ்பவளே, ஏஹி -அருகில் வா, ஏஹி - அருகில் வா, குஹ்யாகே - குகைக்காரியே, ஸ்வாஹா.
உச்சரிப்பு :
குghuணு குguஹ்யாகே குghuணு குghuணு குguஹ்யே ஏஹி ஏஹி குguஹ்யாகே ஸ்sவாஹா
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• அந்தாdhāரஸுந்தdaரீ, இவளின் வேறு ஒரு பெயர் தமஸுந்தdaரீ. அந்தார என்றால் இருட்டு என்று பொருள். தம என்றாலும் இருட்டு என்று பொருள் அதாவது குகைக்குல், இருட்டில் வாழ்பவள். இன்னும் ஒரு பெயர் உண்டு அந்தாரவாஸினீ, அந்தார - இருட்டு, வாஸினீ - வசிப்பவள். இவள் யக்ஷ குலத்தைச் சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ. இவள் ஒரு குஹ்யாகா. யக்ஷ குலத்தை சேர்ந்த ஆண்கள் குகைக்குள் வாழ்ந்தால், அவர்கள் 'குஹ்யாக"என்று அழைக்கப்படுவர். பெண்கள் "குஹ்யாகா" அல்லது "குஹ்யாகீ" என்று அழைக்கப்படுவர்.
• தனிமையான இடம் என்பது வீட்டில் அல்ல. மலையிலோ, கட்டிலோ ஜன நடமாட்டம் அற்ற இடம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக