ரண்டா ஸாதன
இரவு ஒரு அசோக்க மரத்தடிக்கு சென்று யந்த்ரம் வரைந்து, அவளின் அழகிய ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்ய வேண்டும், 8ஆம் நாள் மீன் மாமிசம் படைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, ரண்டா ஒரு கையால் மரக்கிளையை பிடித்தபடி மறு கையால் ஸாதகரை கட்டி தழுவியபடி தோன்றுவாள். அவளுடன் ஸம்போகங் கொண்டு திருப்திப்படுத்த, அவள் ஸாதகரின் எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பாள். ஒவ்வொரு நாளும் பொற்காசுகள் தருவாள். அவளால் மூன்று உலக வேசைகளையும் க்ஷோம்பணம் செய்ய முடியும். இதை விட்டு விட்டு வேறு விதமாகச் செய்வாளானால் அவள் கொல்லப்படுவாள்.
ரண்டா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் ரண்டா விமோஹய விமோஹய ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம் ரண்டா, விமோஹய விமோஹய - அதிமோஹனமாகு, அதிமோஹனமாகு, ஆகச்ச ஆகச்ச - வா, வா, ஸ்வாஹா
உச்சரிப்பு :
ரண்டாḍā ஆகgaச்cசcha ஆகgaச்cசcha
மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ரண்டாḍā என்றால் வேசை என்று பொருள். இவள் ஒரு யக்ஷிணீ. யக்ஷகுலத்தை சேர்ந்தவள்.
• க்ஷோம்பணம் - காம கிளர்ச்சியுட்டுதல்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக