அப்ராதிஹதோஷ்ணீஷ ஸாதன

அப்ராதிஹதோஷ்ணீஷ ஸாதன

ஸாதகர் இரவு ஒரு மலைக்கு சென்று. யந்த்ரம் கீறி, பக்தியுடன் நாளொன்றுக்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி 80 நாட்களுக்கு ஜபம் செய்து. 81ம் நாள் கீறிய யந்த்ரத்துக்கு அருகில் உதாரபலி கொடுத்து, நைவேத்தியம் வைத்து  10000 மந்த்ரம் ஹோமம் செய்ய, மிக பிரகாசமான ஓளியுடன், அப்ராதிஹதோஷ்ணீஷ ஸாதகர் முன் வருவான். அப்பொழுது ஸாதகர் பயப்படாமல், அவனுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் " என்ன வரம் வேண்டும் கேள் " என்று கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து வேலைக்காரனாக, அடிமை போலிருந்து, ஸாதகர் சொற்படி நடந்து; ஸாதகருக்கு பொற்காசுகள், ராஜ்யம், ஆளுமை, அனுபவிக்க அழகான பெண்கள், கல்ப ஆயுஸும் தருவான். நெருப்பை அள்ளி விளையாடலாம், அது சுடாது. நெருப்பை தீப் பொறியில்லாமல், ஸாதகர் தன் விரல்கள் மூலம் உண்டாக்கலாம். தீ பிழம்பை உண்டாக்கி, பந்து எறிவது போல் எறியலாம், ஸாதகரை எவராலும் வெல்ல முடியாத ஸித்தியும், மற்றும் பல ஸித்திகளையும் தருவான்.

அப்ரதிஹதோஷ்ணீஷ ஆவாஹன மந்த்ரம்:
ஓம் நமோ பகவதே அப்ரதிஹதோஷ்ணீஷாய தேஜோமாலினே அக்னயே ஏஹ்யேஹி கார்யம் ஸாதய ஸமயமனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா.

மந்த்ரதின் பொருள்:
ஓம் நமோ பகவதே, அப்ரதிஹதா (தோற்கடிக்கப்பட முடியாதவன்) + உஷ்ṣணீஷாṣāய (கிரீடமே), தேஜோமாலினே - பிரகாசமாக ஒளிரும் மாலையே, அக்னயே - அக்னியே, ஏஹ்யேஹி -  வா வா, கார்யம்  ஸாதய - காரியம் சாதி, ஸமயமனுஸ்மர - சமயஉடன்படிக்கைபடி, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் நமோ பbhaகgaவதே அப்ரதிஹதோஷ்ṣணீஷாṣāய  தேஜோமாலினே அக்gனயே ஏஹ்யேஹி கார்யம் ஸாsāதdhaய ஸsaமயமனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - மீன், மாமிசம் விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், கருப்பு எள், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் - அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• அப்ராதிஹதோஷ்ணீஷ - தோற்கடிக்கப்பட முடியாத கிரீடமே என்று பொருள்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

1 கருத்து: