செல்வந்தனாக்கும் மந்திரம்

செல்வந்தனாக்கும் மந்த்ரம்

" ஓம் பகவதே அப்ரதிஹதோஷ்ணீஷாய ஸர்வத்ராபராஜிதாய ஸமயே சாந்தே தாந்தே தர்மராஜபாஷிதே மஹாவித்யே மம மயாந்திகம் ஸர்வார்தம் ஸாதய ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து. பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். மாயை கையாளும் திறமையும் - ஒரு நபர், பலரையோ அல்லது சூழ்நிலையோ கட்டுப்பாடுத்தும் செல்வாக்கும், அந்தஸ்தும், புத்திசாலித்தனமும்; சகல செல்வங்களும் கூடி, செழிப்போடு வாழலாம்.

• உச்சரிப்பு பொருள் - " ஓம் பbhaகgaவதே, அப்ரதிஹதா (தோற்கடிக்கப்பட முடியாதவன்) + உஷ்ṣணீஷாṣāய (கிரீடமே), ஸsaர்வ த்ராபராஜிதாய - ஸர்வ மூன்று வெற்றி கொள்ள முடியாதவனே, ஸsaமயே - நேரமே; தருணமே, சாśāந்தே - சாந்தமே, தாdāந்தே -  நன்கொடையே, தdhaர்மராஜபாbhāஷிṣiதே - தர்மம் பேசும் ராஜவே, மஹாவித்dயே - மஹாவித்தனே, மம - எனக்கு, மயாந்திகம் - மாயயை, ஸsaர்வார்தthaம் - சகல செல்வமும், ஸாsāதdhaய - சாதி, ஸ்sவாஹா "
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம்; மஞ்சள், சிகப்பு, ஊதா நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்மமாகும் பௌஷ்டிக கர்மத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக