வல்லவனுக்கும் வல்லவனாக்கும் மந்த்ரம்
" ஓம் ஜிஃ ஜிஃ ஜினாங்கப்ர்ரித்பயபேதினே அபராஜிதே மம விஜயம் அபராஜிதம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து. உதாரபலி கெடுத்து, பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அரசியல், பந்தயங்கள், போட்டிகள், போர், சண்டை எதுவாக இருந்தாலும் சரி, எதிர்த்து நிற்கவோ அல்லது போட்டியிடவோ எதிரிகள் பயப்பட்டு நடுங்கும் போது, அவர்களின் வெற்றியை பற்றி பேசிப் பலனுண்டோ. ஸித்தி அடைந்தவர் வெற்றி என்ற சொல்லுக்கே சொந்தக்காரனாவான்.
• உச்சரிப்பு, பொருள் - " ஓம் ஜிஃ ஜிஃ, ஜின + அங்கga + ப்bhர்ரித்d + பbhaய + பேbheதிdiனே - வெற்றி +அங்கம் + மூழ்கும்; அழிக்கும் + பயங்கர + கட்டு மீறி நடுநடுங்க வைப்பவவனே, அபராஜிதே - தோற்கடிக்க முடியாதவனே, மம - எனக்கு, விஜயம் - அதிவெற்றியை, அபராஜிதம் - எவராலும் வெல்ல முடியாமல், குரு குரு - செய் செய், ஸ்sவாஹா ". குறிப்பு - விஜயம் என்று சேர்த்து உச்சரிக்காமல். "வி" பின் "ஜயம்" என்று உச்சரிக்கவும்.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம்; சிகப்பு, ஊதா, மஞ்சள் நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• இது ஒரு விஜய கர்மமாகும். விஜய கர்மத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
, மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
பதிலளிநீக்கு