ஆவாஹன ஸாதனைக்கு தெய்வத்தின் உருவம் வரைவது எப்படி?

ஆவாஹன ஸாதனைக்கு தெய்வத்தின் உருவம் வரைவது எப்படி?

வரைவதற்கான மூல வஸ்து.
மரத்தால் சட்டகம் ஒன்று செய்து, சட்டகத்தின் அளவுக்கேற்ப ஒரு வெள்ளை பருத்தி துணியை எடுத்து அதை மூடி, சட்டகத்தின் விளிம்பில், அத் துணியின் கரையை, இயற்கையான பசையால் ஒட்டி, துணியில் சுருக்கம் எதுவுமில்லதபடி பார்த்து கொள்ளவும். அதன் மேல் குறிப்பிட்ட ஆவாஹனம் செய்யப்படவுள்ள தெய்வத்தின் உருவத்தை அழகாக வரைய வேண்டும். அல்லது போஜ பத்ரத்திலும் வரையலாம். ஸாதனையில் சொல்லப்பட்டுள்ள வஸ்துவை தெரிவு செய்யவும்.

வரையும் விதம்.
சகல ஆபரணங்களும் அணியப்பட்டு, அவளின் சகல அங்கங்களும் அழகாக வரையப்பட வேண்டும். கச்சிதமான நிர்வாணமான மார்பகங்களாகயிருக்க வேண்டும். இடுப்பில் ஆடை - இறக்கமான இடுப்பிலிருந்து (எங்கு விலா எழும்பு இருக்கிறதே) புட்டம் வரை இறக்கமுள்ள, மிகசின்ன கவர்ச்சிகரமான பாவாடையை வரைய வேண்டும்.

வரைவதற்கான மை.
கிடைக்கக்கூடிய அளவு கோரோசனத்தையும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகத்தையும் சேர்த்து அத்துடன் நீர் கலந்து வரையலாம். குங்குமபூவின் பொடிக்கு நீர் கலந்து அல்லது செஞ்சந்தனத்திற்கு நீர் கலந்து மையாக பயன்படுத்தலாம். ஒரே நிறத்தில் வரைவதால், மேனியின் நிறத்தை மங்கலாகவும் கரையோரங்களை நிறத்திண்மையைக் கூட்டியும் வரையவும். ஸாதனையில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அந்த மையை தெரிவு சொய்யவும்.

உங்களுக்கு அழகாக வரைய தெரியாவிட்டால், அழகாக வரையக் கூடியவரிடமிம் கேட்டு வரைந்து கொள்ளலாம். அந்த நபர் வரையும் போது நற்சிந்தனையுடனும் பயபக்தியோடு வரைய வேண்டும். இதற்கு நன்றிக் கடனாக, அவர் மனம் குளிரும்படியா நல்ல பணம் கொடுத்து, நன்றி சொல்ல வேண்டும்.

ஸாதனையில் தெய்வத்தின் உருவம் வரையப்பட சொல்லப்பட்டு இருந்தால் மட்டுமே வரைய வேண்டும். வழமையாக கோர (பயங்கர) தெய்வங்களின் ஸாதனைக்கு படம் வரைவதில்லை.

போbhoஜ பத்ரம் - பூர்ஜ பத்திரம். ஆன்மிககடைகளில் வாங்கலாம்.
சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம் (உலோகம்) - சமஸ்கிருதத்தில் sindura, ஆங்கிலத்தில் red lead. சுத்தி செய்யாத சிகப்பு நாகம் நஞ்சு, பயங்கரமாக தோலை அரிக்கக் கூடியது. ஆன்மிக கடைகளில் அல்லது அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவரிடமிரு்து சுத்தி செய்யப்பட்ட சிகப்பு நாகத்தை வாங்கலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

மந்திரங்களை இயற்றுவது எப்படி?

மந்த்ரங்களை இயற்றுவது எப்படி?

மந்த்ரங்கள் என்றாலேதோ வானத்திலிருந்து வருவது போலவும், மாயை கொண்டது போன்ற விம்பங்களாக காட்டப்படுவதிலெந்தொரு உண்மையுமில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதை, ஒரு வடிவத்தில் அமைப்பதே மந்த்ரங்கள் இயற்றுவதாகும். தந்த்ர மந்த்ரங்களென்றால், அதற்கு தகுந்தாற் போல் பீஜ மந்த்ரங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.

மந்த்ரங்களை இயற்றுவது என்பது பெரிய வேலையேயில்லை. வெகு சுலபமானது, அனுபவமும் கற்பனையுமிருந்தால் போதும். மேலும் கொஞ்சம் தெய்வத்தின் அனுக்கிரமிருந்தால் போதும் அதாவது மஹாக்ரோதராஜாவை வழிபட்டுவர தன்னிச்சையாக மதிக்கு வந்த வண்ணமிருக்கும்.

தெய்வத்திடம் விருப்பத்தை தெரிவிக்கும் மந்த்ரங்களை எப்படி இயற்றுவது என்று பார்க்கலாம். அதன் வடிவம் - ஓம் என்று தொடங்கி ஸ்வாஹா என்று முடியும். "ஓம்" சொல்லுக்கு பின் "தெய்வத்தின் பெயர்" அதன் பின் "விருப்பத்தை தெரிவித்தல்" கடைசியில் "ஸ்வாஹா". தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ மந்த்ரங்களை இயற்றலாம்.

செல்வந்தனாக்கும் மந்த்ரத்தை சமஸ்கிருதத்தில் இயற்றிப் பார்ப்போம்.
காளீயிடம் போய் செல்வத்தை தா என்று கேட்டால் அவள் தரமாட்டாள். ஆகவே செல்வந்தனாக கூடிய தெய்வங்களில், ஒரு தெய்வம் குபேரன் அவனிடம் கேட்போம். முதலில் ஓம் அடுத்தது குபேர, அடுத்தது அர்த - செல்வம், அடுத்து மம - எனக்கு, குரு குரு - செய் செய், கடைசியில் ஸ்வாஹா. "ஓம் குபேரே அர்தம் மம குரு குரு ஸ்வாஹா".

தமிழில் இயற்றுவோம்.
ஒம், அடுத்தது இந்திர
ன், அடுத்தது தேவாதிதேவ, அடுத்தது எனக்கு, செல்வம் செழிப்பு, தா தா, ஸ்வாஹா. "ஒம் இந்திரனே தேவாதிதேவனே எனக்கு செல்வம் செழிப்பு தா தா ஸ்வாஹா" ஏன் தேவாதிதேவ என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது ?அது இந்திரனை குஷிப்படுத்த சேர்க்கப்பட்ட சொல். தேவாதிதேவ என்றால் இந்திரனின் ஒரு பெயர். இந்திரனையும் தேவாதிதேவ என்ற இரு சொற்களையும் எடுத்து விட்டு அந்த இடத்தில் சனைச்வரர் அல்லது ஸ்வர்ணகர்ஷனபைரவ என்றும் வைத்தும் இயற்றலாம்.

சிவனின் ஒரு மந்த்ரத்தை இயற்றிப் பார்ப்போம்.
"ஓம் மஹாதேவனே ஜடாமுடிகாரனே எல்லா உயிரினத்துக்கும் தெய்வமே எனக்கு சௌபாக்கியம் தா தா ஸ்வாஹா". ஜடாமுடிகாரனே - அவனின் அங்க வடிவத்தை குறிப்பிடுகிறேன். உயிரினத்துக்கும் தெய்வமே - அவன் மஹிமை, குணத்தை குறிப்பிடுகிறேன். இந்த இரு சொற்களும் அவனை குஷிப்படுத்த உபயோகித்திருக்கிறேன்.

"ஒம் பைரவனே அஷ்டமா ஸித்திகள் தா தா ஸ்வாஹா" இப்படி மந்த்ரம் இயற்றினால் வேலை செய்யாது ஏன்னென்றால் கரு தேவை. அதாவது மூலிகைகளாலான மை தேவை.

தமிழில் கருப்பண்ண ஸ்வாமி ஆவாஹன மந்திரத்தை இயற்றிப் பார்போம்.
ஒம் அடுத்தது கருப்பு ஸ்வாமி அடுத்தது கிளம்பி அடுத்தது உடனே அடுத்தது வா வா அடுத்தது ஸ்வாஹா. "ஒம் கருப்பு ஸ்வாமி கிளம்பி உடனே வா வா ஹூம் பட் ஸ்வாஹா" அல்லது "ஒம் உக்கிர கருப்பு ஸ்வாமி உடனே வா வா என் முன் தரிசனம் தா தா ஹூம் பட் ஸ்வாஹா" அல்லது "ஒம் உக்கிர கருப்பு ஸ்வாமி உடனே வா வா எனக்கு காரியம் ஸாதி ஸாதி ஹூம் பட் ஸ்வாஹா".

மந்த்ரங்களை இயற்றுவதின் சூட்சுமத்தையும் சொல்லி விட்டேன். இவுலகில் எவரும் சொல்லாததை சொல்லியிருக்கிறேன்.

கருப்பு ஸ்வாமி கோர (பயங்கர) தெய்வம். யாராவது கருப்பு ஸ்வாமி ஸாதனை செய்ய விரும்பினால். பின்வருமாறு - சுடலைக்கு போக வேண்டும். ஒரு லட்சம் ஜபித்து, 10000 ஹோமம் செய்ய வேண்டும். பலி; மீன், மாமிசம், மது, சுருட்டு படைக்க வேண்டும். அவன் தோன்றி, என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஸாதகர் "எனக்கு வசமாகிய வேலைக்காரனாக இரு" என்று சொல்ல வேண்டும். அதன் பின் எதுவித அருள் வந்தும் ஆடாமல், சாந்தமாயிருந்து கொண்டு, 24 மணி நேரமும் மக்களின் குறைகளை தீர்த்து வைக்கலாம்.

இப்படி இசக்கி அம்மன், மாடன் முதற்கொண்டு எந்த தெய்வத்திற்கு வேண்டுமானாலும் ஆவாஹன மந்த்ரங்களை இயற்றிக் கொள்ளலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

ஸாதனைப் பிரகாரமல்லாமல் தெய்வத்தை வேறு விதமாக ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும்?

ஸாதனைப் பிரகாரமல்லாமல் தெய்வத்தை வேறு விதமாக ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும்?

வழமையாக, தெய்வங்கள் ஸாதகர் முன் தோன்றும் போது ஸாதனைப் பிரகாரம் தாய், மனைவி, சகோதரீ, தோழி, வேலைக்காரீ, போஜ்யா அல்லது அடிமையாக ஏற்றுக் கொள்வதுண்டு. ஸாதகர் ஸாதனைப் பிரகாரமல்லாமல் தான் நினைத்தபடி தெய்வத்தை ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். ஸாதகர் எப்படி தெய்வத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது தெய்வத்தின் சொந்த விருப்பம்.

சில தெய்வங்களை எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம் அது ஸாதனையில் சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு இந்த ஸாதனைகளை பார்க்கவும் ஸுஜயா, வடயக்ஷிணீ, ஸுரஸுந்தரீ, வீபூஷணீ.

காமேச்வரீ, ரதிப்ரியா..... போன்ற தெய்வங்களின் பெயரே சொல்லுகிறது அவர்கள் போகங்கொள்ள எவ்வளவு நாட்டம் கொண்டவர்களென்று, இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி தாயாகவோ அல்லது சகோதரீயாகவோ ஏற்றுக் கொள்வது? விப்ரமா, விசாலா... போன்ற தெய்வங்களின் பெயரே சொல்லுகிறது, ஒருத்தி கிழவி, மற்றவள் பெரிய உருவம் கொண்டவளென்று. இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்வது? ஒரு தெய்வத்தின் மேனி, குமட்டும் குரங்கின் வாசனை அடித்தால் அவளை எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்வது? ஒரு தெய்வத்தின் நாக்கு குருவியின் நாக்கு போன்று இருந்தால், அவளை எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்வது? இதை இப்படி இப்படித் தான் செய்ய வேண்டுமென்றதெல்லாம் வகுக்கப்பட்டுள்ளது.

தெய்வமே ஸாதனையை மதித்து ஸாதகர் முன் தோன்றி ஸாதகருக்கு நல்லது செய்ய வரும் போது, ஸாதகர் ஸாதனைப் பிரகாரமல்லாமல் தன்இஷ்டத்துக்கு தெய்வத்தை ஏற்றுக் கொண்டால், ஸாதகர் ஸாதனையை அவமதிப்பதாக கருதப்படும். இதனால் ஸாதகர் அனர்த்தத்தை சந்திக்க நேரிடலாம்.

எப்படிப்பட்ட அனர்த்தம்? உதாரணத்திற்கு, உமாதேவீ ஸாதகர் முன் தோன்றுகிறாள், அவளை மனைவியாக ஏற்று கொள்ளாமல் வேறுவிதமாக ஏற்றுக் கொள்ள முற்பட்டாலோ அல்லது "பராசக்தியே உன்னைக் கண்டது எனக்கு எவ்வளவு பெருமை" என்று தேவையில்லாததை ஏதாவதையாவது புலம்பிக் கொண்டிருந்தால் அவள் பன்றி இரத்தத்தை எடுத்து ஸாதகர் மேல் அடித்துவிட்டு (ஊற்றி) மறைந்து விடுவாள். வேறு தெய்வங்கள் வேறு மாதிரிக்கூட செய்யலாம். அதனால் ஸாதனையில் சொல்லப்பட்டபடி பின்பற்றி, ஸாதனையை செய்தால், என்றும் வெற்றியே கிடைக்கும்.

அதே போல் சோடிகா ஸாதனையில், தெய்வங்களை வீட்டுப்பணி, தோட்டவேலை செய்வதற்காக அடிமையாக வைத்திருக்கும் போது பாலியல் ரீதியிலான எந்தவித தொந்தரவுகளும் கொடுக்கக் கூடாது. எப்படி தெய்வம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அப்படியே நடவடிக்கைகளுமிருக்க வேண்டும்.

• போஜ்யா - போகத்தை தரும் பெண்.
• விப்ரமா - என்றால் வயதாகியவள்.
• காமேச்வரீ - காமத்தின் ஈச்வரீ.
• ரதிப்ரியா - போகங்கொள்ள பிரியப்படுபவள்.
• விசாலா - விசாலமான உருவம் கொண்டவள்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.