மஹாக்ரோதராஜா ஜப மந்திரம்
" ஓம் ஆஃ ஹூம் மஹாக்ரோதராஜாய நமஃ " மஹாக்ரோதராஜாவின் ஜப மந்த்ரம். இந்த மந்த்ரத்தை ஜபித்து வர வாழ்க்கை மேம்படும். இதுவே இவனை இஷ்டதெய்வமாக ஏற்று ஜபம் செய்யும் மந்த்ரம். இந்த மந்த்ரத்திலுள்ள ஓம் ஆஃ ஹூம் என்ற மூன்று சொற்களையும் கொண்டதை காயவாக்சித்தாதிஷ்டான மந்த்ரமென்று அழைக்கப்படும். அதாவது உடல், பேச்சு மற்றும் மனதை மேம்படுத்துகிற மந்த்ரமாகும்.
சாமானிய மனிதன் மஹாக்ரோதராஜாவின் படத்தை வைத்தோ அல்லது படமில்லாமலோ நாள் ஒன்றுக்கு 108 தடவை காலையில் ஜபிக்கலாம். இப்படி ஜபித்து வர, ஒரு கட்டத்தில் உங்கள் வழிபாடுகள் மஹாக்ரோதராஜாவால் கேட்கப்படுவதையும், வாழ்க்கை மேம்படுவதையும் உணர முடியும். இதனால் எதிரிகள், துரோகிகள் இருக்கமாட்டார்கள்; முழுமையான பாதுகாப்பு உண்டாகும்; யமன் உங்களை அண்ட பயப்படுவான், ஆயுள் ஆதிகரிக்கும்; வரும் ஆபத்துகள் சிக்கல்கள், பிச்சனைகள் உங்கள் மதிக்கு முன்கூட்டியே உணர்த்தப்படும்; சரியான பாதையில் நெறிப்படுத்தபடுவீர்கள் உதாரணத்துக்கு முதலீடு செய்யலாமா இல்லையா, ஏதாவதொரு காரியம் செய்யலாமா இல்லையா, யாரை நம்பலாம் யாரை நம்பக் கூடாது; பிரபஞ்சத்திலிருந்து மதிக்கு அறிவு வந்தவண்ணமிருக்கம்.
ஜந்து லட்சம் ஐபம் செய்து 50 ஆயிரம் ஹோமம் செய்யவும். சாந்தி கர்ம முறைப்படி கார்த்திகை மார்கழி மாதங்களில் வரும் பௌர்ணமி அல்லது ஏகாதசி வளர்பிறை திதியில், செவ்வாய், சனி அல்லது ஞாயிற்று கிழமையில் செய்யவும்.
ஆவாஹன ஸாதன அல்லது மாந்த்ரீகம் ஈடுபட போகின்றவர்களுக்கு - பிசாசுகுலம் (பிசாசு, பிசாசனீ, ச்மசானவாஸினீ), குட்டிசாத்தான், சேடிகா போன்றோரை ஆவாஹனம் செய்வது இலகுவானது. ஆனால் தேவகுலம், பூதகுலம், யக்ஷகுலம், கந்தர்வகுலம், வித்யாதாரகுலம், கின்னரகுலம், அரககுலம், அஸுரகுலம் இக் குலங்களிலுள்ளோரை ஆவாஹனம் செய்ய மஹாக்ரோதராஜாவின் பூர்ண அனுகிரகம் தேவை. அப்பொழுது தான் ஸாதனையில் இலகுவாக ஸித்தி கிடைக்கும். அனுகிரகம் கிடைக்க வீட்டின் கொல்லைப் புறத்தில் அல்லது பிரத்தியோக கரமான இடத்தில் மஹாக்ரோதராஜாவின் படத்தை வைத்தோ அல்லது சிலையை வைத்தோ வழிபட வேண்டும். ஒவ்வொரு நாளும் தூபதீபம் காட்டி; பூக்கள், பழம், நைவேத்தியம் வைத்து; தபஸ், தர்பணம் செய்து வழிபட வேண்டும் அல்லது பூஜை செய்யத் தெரிந்தால் செய்யலாம். கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் தவறாமல் செய்வது, முக்கியமானது. மேலும் ஆவாஹன ஸாதனயில் ஸித்திக்கு முன்போ அல்லது பின்போ, தெய்வங்கள் உங்களை பய பக்தியோடு அணுகும். ஏனென்றால் நீங்கள் மஹாக்ரோதராஜாவின் ஆள், அவனன்பு உங்கள் மேலிருப்பதால்.
க்ரோதபைரவ(ர்) இவனை இஷ்டதெய்வமாக ஏற்றுக் கொள்ள விருப்பப்படுகிறவர்கள் இந்த ஜப மந்த்திரத்தை உபயோகிக்கலாம். "ஓம் க்ரோதபைரவாய நமஃ ". முறைகளும் பலன்களும் மஹாக்ரோதராஜாவிற்கு மேலே சொன்னவைகளே.
• படத்திலோ அல்லது சிலையிலோ, தெய்வம் நிர்வாணமாக இருப்பதாக எண்ணி துணியால் மூடிமறைக்கக் கூடாது.
• எச்சரிக்கை - கோர (பயங்கர) தெய்வங்களை இஷ்டதெய்வமாக ஏற்றுக் கொள்ளும் போது வழக்கத்தை கடைப் பிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு இரண்டு நாள் மந்த்ரம் ஜபம் செய்வது பின்னர் மூன்று நாள் கழித்து ஜபம் செய்வது போன்ற வழக்க முறைகேடுகளை செய்யக் கூடாது. கேர தெய்வங்கள் உடனே பலனை தரக் கூடியவை, பலன்களை பெற்ற பின் மறந்து போவதெல்லாம் சரிப்பட்டு வராது. இது உங்கள் வாழ்க்கையில் அனர்த்தத்தை உருவாக்கும். அதனால் இது உங்களுக்கு தேவையா என்று சிந்தித்து செயல்படவும். மேலும் இஷ்டதெய்வமாக ஒரு மாதத்திற்கு காளீ, பின்னர் வேறு ஒரு தெய்வம் என்றும் இஷ்டதெய்வத்தை மாற்றிக் கொண்டும் இருக்கக் கூடாது.
• உச்சரிப்பு - " ஓம் ஆஃ ஹூம் மஹாக்ரோதdhaராஜாய நமஃ ", காயவாக்சிciத்தாதிdhiஷ்ṣடாthāன.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக