ஸாதனைப் பிரகாரமல்லாமல் தெய்வத்தை வேறு விதமாக ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும்?
வழமையாக, தெய்வங்கள் ஸாதகர் முன் தோன்றும் போது ஸாதனைப் பிரகாரம் தாய், மனைவி, சகோதரீ, தோழி, வேலைக்காரீ, போஜ்யா அல்லது அடிமையாக ஏற்றுக் கொள்வதுண்டு. ஸாதகர் ஸாதனைப் பிரகாரமல்லாமல் தான் நினைத்தபடி தெய்வத்தை ஏற்றுக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். ஸாதகர் எப்படி தெய்வத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது தெய்வத்தின் சொந்த விருப்பம்.
சில தெய்வங்களை எப்படி வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளலாம் அது ஸாதனையில் சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு இந்த ஸாதனைகளை பார்க்கவும் ஸுஜயா, வடயக்ஷிணீ, ஸுரஸுந்தரீ, வீபூஷணீ.
காமேச்வரீ, ரதிப்ரியா..... போன்ற தெய்வங்களின் பெயரே சொல்லுகிறது அவர்கள் போகங்கொள்ள எவ்வளவு நாட்டம் கொண்டவர்களென்று, இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி தாயாகவோ அல்லது சகோதரீயாகவோ ஏற்றுக் கொள்வது? விப்ரமா, விசாலா... போன்ற தெய்வங்களின் பெயரே சொல்லுகிறது, ஒருத்தி கிழவி, மற்றவள் பெரிய உருவம் கொண்டவளென்று. இப்படிப்பட்ட தெய்வங்களை எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்வது? ஒரு தெய்வத்தின் மேனி, குமட்டும் குரங்கின் வாசனை அடித்தால் அவளை எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்வது? ஒரு தெய்வத்தின் நாக்கு குருவியின் நாக்கு போன்று இருந்தால், அவளை எப்படி மனைவியாக ஏற்றுக் கொள்வது? இதை இப்படி இப்படித் தான் செய்ய வேண்டுமென்றதெல்லாம் வகுக்கப்பட்டுள்ளது.
தெய்வமே ஸாதனையை மதித்து ஸாதகர் முன் தோன்றி ஸாதகருக்கு நல்லது செய்ய வரும் போது, ஸாதகர் ஸாதனைப் பிரகாரமல்லாமல் தன்இஷ்டத்துக்கு தெய்வத்தை ஏற்றுக் கொண்டால், ஸாதகர் ஸாதனையை அவமதிப்பதாக கருதப்படும். இதனால் ஸாதகர் அனர்த்தத்தை சந்திக்க நேரிடலாம்.
எப்படிப்பட்ட அனர்த்தம்? உதாரணத்திற்கு, உமாதேவீ ஸாதகர் முன் தோன்றுகிறாள், அவளை மனைவியாக ஏற்று கொள்ளாமல் வேறுவிதமாக ஏற்றுக் கொள்ள முற்பட்டாலோ அல்லது "பராசக்தியே உன்னைக் கண்டது எனக்கு எவ்வளவு பெருமை" என்று தேவையில்லாததை ஏதாவதையாவது புலம்பிக் கொண்டிருந்தால் அவள் பன்றி இரத்தத்தை எடுத்து ஸாதகர் மேல் அடித்துவிட்டு (ஊற்றி) மறைந்து விடுவாள். வேறு தெய்வங்கள் வேறு மாதிரிக்கூட செய்யலாம். அதனால் ஸாதனையில் சொல்லப்பட்டபடி பின்பற்றி, ஸாதனையை செய்தால், என்றும் வெற்றியே கிடைக்கும்.
அதே போல் சோடிகா ஸாதனையில், தெய்வங்களை வீட்டுப்பணி, தோட்டவேலை செய்வதற்காக அடிமையாக வைத்திருக்கும் போது பாலியல் ரீதியிலான எந்தவித தொந்தரவுகளும் கொடுக்கக் கூடாது. எப்படி தெய்வம் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அப்படியே நடவடிக்கைகளுமிருக்க வேண்டும்.
• போஜ்யா - போகத்தை தரும் பெண்.
• விப்ரமா - என்றால் வயதாகியவள்.
• காமேச்வரீ - காமத்தின் ஈச்வரீ.
• ரதிப்ரியா - போகங்கொள்ள பிரியப்படுபவள்.
• விசாலா - விசாலமான உருவம் கொண்டவள்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
ஐயா சில கேள்விகள்
பதிலளிநீக்குநான் இது போன்ற மந்திர சாதனை சில வருடங்கள் முன் செய்தேன் . சில மாதகள் பின்னர்
காலையில் என்னது மூக்கு நூனியில் வாசனை திறவியம் தெளிப்பது போல் இருந்தது.
உங்கள் பதிவில் உள்ளது போல் சில மாதகள் அந்த வாசனை நா ன் தெருவில் நடாகும் பொது வரும் ஆனால் இப்போது அது இல்லை.
பின்னர் இது என்ன என்று ஆராய் தொடங்கிய போது யக்ஷி, அப்சரா போன்ற தெய்வங்கள் பற்றி அறிதல் தேவை ஏற்பட்டது .
இது என்ன என்று நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும் . பல கேள்விகள் உள்ளன . நான் சொன்ன மந்திர வார்த்தை ஷ்ரீம் (ஸ்ரீம்) இருந்தது .
யக்ஷிணீ, அப்ஸரஸ் போன்ற தெய்வங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
நீக்குநீங்கள் செய்த ஸாதனையினால் உங்கள் மூளையிலுள்ள ஏற்பி செயல்படுத்தப்பட துவங்கியுள்ளது, அதன் மூலம் மூக்கில் குறிப்பிட்ட நுகரும் உணர்வு தூண்டப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.
கேள்வி
பதிலளிநீக்கு1) நீங்கள் யக்ஷிணீ, அல்லது அப்ஸரஸ் தெய்வங்களை நேரில் கண்டு இருக்கிறீர்களா ?
இதற்கு பதில் சொன்னால் மேலும் பல கேள்விகள் கேட்க எனக்கு ஆர்வமாய் உள்ளது.
இதற்கான பதில், இந்த பதிவில் பத்தாவது கேள்வியின் கடைசியிலுள்ளது.
நீக்குhttps://devaloka-rahasyam.blogspot.com/2020/05/blog-post_22.html
உங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் உங்கள் சுய அனுபவங்களை கூறினால் மிக தெளிவு கிடைக்கும். குறிப்பாக யக்ஷிணீ , அப்ஸரஸ் எந்த மொழியில் பேசுவார்கள் ?
பதிலளிநீக்குஸாதகர் (நீங்கள்) எந்த மொழியில் பேசுகிறானோ அந்த மொழியில் தெய்வங்கள் கதைக்கும்.
நீக்கு