மந்த்ரங்களை இயற்றுவது எப்படி?
மந்த்ரங்கள் என்றாலேதோ வானத்திலிருந்து வருவது போலவும், மாயை கொண்டது போன்ற விம்பங்களாக காட்டப்படுவதிலெந்தொரு உண்மையுமில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதை, ஒரு வடிவத்தில் அமைப்பதே மந்த்ரங்கள் இயற்றுவதாகும். தந்த்ர மந்த்ரங்களென்றால், அதற்கு தகுந்தாற் போல் பீஜ மந்த்ரங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
மந்த்ரங்களை இயற்றுவது என்பது பெரிய வேலையேயில்லை. வெகு சுலபமானது, அனுபவமும் கற்பனையுமிருந்தால் போதும். மேலும் கொஞ்சம் தெய்வத்தின் அனுக்கிரமிருந்தால் போதும் அதாவது மஹாக்ரோதராஜாவை வழிபட்டுவர தன்னிச்சையாக மதிக்கு வந்த வண்ணமிருக்கும்.
தெய்வத்திடம் விருப்பத்தை தெரிவிக்கும் மந்த்ரங்களை எப்படி இயற்றுவது என்று பார்க்கலாம். அதன் வடிவம் - ஓம் என்று தொடங்கி ஸ்வாஹா என்று முடியும். "ஓம்" சொல்லுக்கு பின் "தெய்வத்தின் பெயர்" அதன் பின் "விருப்பத்தை தெரிவித்தல்" கடைசியில் "ஸ்வாஹா". தமிழிலோ அல்லது சமஸ்கிருதத்திலோ மந்த்ரங்களை இயற்றலாம்.
செல்வந்தனாக்கும் மந்த்ரத்தை சமஸ்கிருதத்தில் இயற்றிப் பார்ப்போம்.
காளீயிடம் போய் செல்வத்தை தா என்று கேட்டால் அவள் தரமாட்டாள். ஆகவே செல்வந்தனாக கூடிய தெய்வங்களில், ஒரு தெய்வம் குபேரன் அவனிடம் கேட்போம். முதலில் ஓம் அடுத்தது குபேர, அடுத்தது அர்த - செல்வம், அடுத்து மம - எனக்கு, குரு குரு - செய் செய், கடைசியில் ஸ்வாஹா. "ஓம் குபேரே அர்தம் மம குரு குரு ஸ்வாஹா".
தமிழில் இயற்றுவோம்.
ஒம், அடுத்தது இந்திரன், அடுத்தது தேவாதிதேவ, அடுத்தது எனக்கு, செல்வம் செழிப்பு, தா தா, ஸ்வாஹா. "ஒம் இந்திரனே தேவாதிதேவனே எனக்கு செல்வம் செழிப்பு தா தா ஸ்வாஹா" ஏன் தேவாதிதேவ என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது ?அது இந்திரனை குஷிப்படுத்த சேர்க்கப்பட்ட சொல். தேவாதிதேவ என்றால் இந்திரனின் ஒரு பெயர். இந்திரனையும் தேவாதிதேவ என்ற இரு சொற்களையும் எடுத்து விட்டு அந்த இடத்தில் சனைச்வரர் அல்லது ஸ்வர்ணகர்ஷனபைரவ என்றும் வைத்தும் இயற்றலாம்.
சிவனின் ஒரு மந்த்ரத்தை இயற்றிப் பார்ப்போம்.
"ஓம் மஹாதேவனே ஜடாமுடிகாரனே எல்லா உயிரினத்துக்கும் தெய்வமே எனக்கு சௌபாக்கியம் தா தா ஸ்வாஹா". ஜடாமுடிகாரனே - அவனின் அங்க வடிவத்தை குறிப்பிடுகிறேன். உயிரினத்துக்கும் தெய்வமே - அவன் மஹிமை, குணத்தை குறிப்பிடுகிறேன். இந்த இரு சொற்களும் அவனை குஷிப்படுத்த உபயோகித்திருக்கிறேன்.
"ஒம் பைரவனே அஷ்டமா ஸித்திகள் தா தா ஸ்வாஹா" இப்படி மந்த்ரம் இயற்றினால் வேலை செய்யாது ஏன்னென்றால் கரு தேவை. அதாவது மூலிகைகளாலான மை தேவை.
தமிழில் கருப்பண்ண ஸ்வாமி ஆவாஹன மந்திரத்தை இயற்றிப் பார்போம்.
ஒம் அடுத்தது கருப்பு ஸ்வாமி அடுத்தது கிளம்பி அடுத்தது உடனே அடுத்தது வா வா அடுத்தது ஸ்வாஹா. "ஒம் கருப்பு ஸ்வாமி கிளம்பி உடனே வா வா ஹூம் பட் ஸ்வாஹா" அல்லது "ஒம் உக்கிர கருப்பு ஸ்வாமி உடனே வா வா என் முன் தரிசனம் தா தா ஹூம் பட் ஸ்வாஹா" அல்லது "ஒம் உக்கிர கருப்பு ஸ்வாமி உடனே வா வா எனக்கு காரியம் ஸாதி ஸாதி ஹூம் பட் ஸ்வாஹா".
மந்த்ரங்களை இயற்றுவதின் சூட்சுமத்தையும் சொல்லி விட்டேன். இவுலகில் எவரும் சொல்லாததை சொல்லியிருக்கிறேன்.
கருப்பு ஸ்வாமி கோர (பயங்கர) தெய்வம். யாராவது கருப்பு ஸ்வாமி ஸாதனை செய்ய விரும்பினால். பின்வருமாறு - சுடலைக்கு போக வேண்டும். ஒரு லட்சம் ஜபித்து, 10000 ஹோமம் செய்ய வேண்டும். பலி; மீன், மாமிசம், மது, சுருட்டு படைக்க வேண்டும். அவன் தோன்றி, என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு ஸாதகர் "எனக்கு வசமாகிய வேலைக்காரனாக இரு" என்று சொல்ல வேண்டும். அதன் பின் எதுவித அருள் வந்தும் ஆடாமல், சாந்தமாயிருந்து கொண்டு, 24 மணி நேரமும் மக்களின் குறைகளை தீர்த்து வைக்கலாம்.
இப்படி இசக்கி அம்மன், மாடன் முதற்கொண்டு எந்த தெய்வத்திற்கு வேண்டுமானாலும் ஆவாஹன மந்த்ரங்களை இயற்றிக் கொள்ளலாம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக