ஆவாஹன ஸாதனைக்கு தெய்வத்தின் உருவம் வரைவது எப்படி?

ஆவாஹன ஸாதனைக்கு தெய்வத்தின் உருவம் வரைவது எப்படி?

வரைவதற்கான மூல வஸ்து.
மரத்தால் சட்டகம் ஒன்று செய்து, சட்டகத்தின் அளவுக்கேற்ப ஒரு வெள்ளை பருத்தி துணியை எடுத்து அதை மூடி, சட்டகத்தின் விளிம்பில், அத் துணியின் கரையை, இயற்கையான பசையால் ஒட்டி, துணியில் சுருக்கம் எதுவுமில்லதபடி பார்த்து கொள்ளவும். அதன் மேல் குறிப்பிட்ட ஆவாஹனம் செய்யப்படவுள்ள தெய்வத்தின் உருவத்தை அழகாக வரைய வேண்டும். அல்லது போஜ பத்ரத்திலும் வரையலாம். ஸாதனையில் சொல்லப்பட்டுள்ள வஸ்துவை தெரிவு செய்யவும்.

வரையும் விதம்.
சகல ஆபரணங்களும் அணியப்பட்டு, அவளின் சகல அங்கங்களும் அழகாக வரையப்பட வேண்டும். கச்சிதமான நிர்வாணமான மார்பகங்களாகயிருக்க வேண்டும். இடுப்பில் ஆடை - இறக்கமான இடுப்பிலிருந்து (எங்கு விலா எழும்பு இருக்கிறதே) புட்டம் வரை இறக்கமுள்ள, மிகசின்ன கவர்ச்சிகரமான பாவாடையை வரைய வேண்டும்.

வரைவதற்கான மை.
கிடைக்கக்கூடிய அளவு கோரோசனத்தையும், சுத்தி செய்யபட்ட சிகப்பு நாகத்தையும் சேர்த்து அத்துடன் நீர் கலந்து வரையலாம். குங்குமபூவின் பொடிக்கு நீர் கலந்து அல்லது செஞ்சந்தனத்திற்கு நீர் கலந்து மையாக பயன்படுத்தலாம். ஒரே நிறத்தில் வரைவதால், மேனியின் நிறத்தை மங்கலாகவும் கரையோரங்களை நிறத்திண்மையைக் கூட்டியும் வரையவும். ஸாதனையில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அந்த மையை தெரிவு சொய்யவும்.

உங்களுக்கு அழகாக வரைய தெரியாவிட்டால், அழகாக வரையக் கூடியவரிடமிம் கேட்டு வரைந்து கொள்ளலாம். அந்த நபர் வரையும் போது நற்சிந்தனையுடனும் பயபக்தியோடு வரைய வேண்டும். இதற்கு நன்றிக் கடனாக, அவர் மனம் குளிரும்படியா நல்ல பணம் கொடுத்து, நன்றி சொல்ல வேண்டும்.

ஸாதனையில் தெய்வத்தின் உருவம் வரையப்பட சொல்லப்பட்டு இருந்தால் மட்டுமே வரைய வேண்டும். வழமையாக கோர (பயங்கர) தெய்வங்களின் ஸாதனைக்கு படம் வரைவதில்லை.

போbhoஜ பத்ரம் - பூர்ஜ பத்திரம். ஆன்மிககடைகளில் வாங்கலாம்.
சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம் (உலோகம்) - சமஸ்கிருதத்தில் sindura, ஆங்கிலத்தில் red lead. சுத்தி செய்யாத சிகப்பு நாகம் நஞ்சு, பயங்கரமாக தோலை அரிக்கக் கூடியது. ஆன்மிக கடைகளில் அல்லது அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவரிடமிரு்து சுத்தி செய்யப்பட்ட சிகப்பு நாகத்தை வாங்கலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

5 கருத்துகள்:

  1. ஐயா, ஒரு படத்தை உதாரனத்திற்கு காட்ட முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைகளில் விற்கும் பெரிய சாமிப் படத்துடன் ஒப்பனை செய்து கொள்ளவும். அதிலிருக்கும் சாமி படத்திற்கு பதிலாக பருத்தி துணி இருப்பதாக கற்பனை செய்யவும். அந்த துணியின் மேல் மை கொண்டு வரைய வேண்டும்.

      நீக்கு
  2. ஐயா, ஒரிஜினல் புனுகு எங்கு கிடைக்கும்?

    பதிலளிநீக்கு