மஹாக்ரோதராஜா

மஹாக்ரோதராஜா

க்ரோதபைரவ(ர்) அந்த அளவுக்கு க்ரோதமானவன் அதனால் அவன் மஹாக்ரோதராஜா என்று அழைக்கப்படுகிறான். மஹாகோர (மஹாபயங்கரமான) வடிவம். நீல நிற மேனி. மூன்று கண்கள். மண்டையோடுகளை மாலையாக அணிந்து இருக்கிறான். 12 கைகள்.

வலது கையில் - வஜ்ரம், நெளிகத்தி, டமரு மேளம், ஸித்தி தருகிறான், ஒரு கையில் ஆள்காட்டிவிரலால் மூன்று உலகத்திற்குமாணையிடுகிறான். அவன் மூன்று உலகத்திற்கும் அதிபதியான கடவுள். இவனை மிஞ்சியவன் எவனுமில்லை.

இடது வலது இருகைகளில் - யானைத் தோல் (யானைத் தோல் அவனின் முதுகின் பின்புமாகருக்கும்).

இடது கையில் - கட்வாங்கம், கபாலம், கோடாரி, பாசம். கண்இமை, வாய் ஓரங்களில் வஜ்ர பொறி பறந்த வண்ணமிருக்கின்றன. கிரீடத்தில் ஜந்து க்ரோத மண்டையோடுகள். முடி மேலே எழும்பி நிற்கிறது, அதில் பிறை. அவன் மேனியில் வேறுபட்ட இடங்களில் எட்டு பாம்புகள் இருக்கின்றன.

அவனுடைய லிங்கம், சக்தியின் யோனியை புணர்ந்த வண்ணமிருக்கிறது. மஹாசுகத்தில் தழைத்து சிற்றின்ப திருப்தியால் மஹாமகிழ்ச்சியில் நிற்கிறான். அவன் தேஜஸ் பளபளக்கும் சூரியன்கள்.

சக்தியின் வடிவம் மூன்று கண்கள், பந்தூக பூ நிற மேனி, உடல் கல்ப முடிவில் இருக்கும் நெருப்பு மாதிரி. இருகைகள், வலது கையில் கபாலம் - மனித மண்டையோட்டில் மாரக்களின் ரத்தம் நிறம்பி இருக்கிறது. இடது கையில் தர்ஜனி முத்திரை, வஜ்ரம். தலை விரிகேலமான தளர்வான முடி. அவள் அவனின் விரைத்து எழும்பி நிற்கும் லிங்கத்தை தன் யோனிக்குள் செருகியபடி எப்போதும் மஹாசுகத்தை அனுபவித்தபடி, இடதுகாலை அவனின் இடுப்புக்கு பின்பிறமாக போட்டவாரு, வலது காலில் நிற்கிறாள்.

இருவரும் சகல ஆபரணங்களும் அணிந்து, நிர்வாணமாக இருக்கிறார்கள். இருவரும் போகத்தில் ஈடுபட்டுக் கொண்டு, ஆளுக்கொரு பிரேதத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் பிரளயம் தெரிகிறது.

இவனை மூலோகத்தில் எப்படியெல்லாம் அழைக்கிறார்கள் என்று கீழே காணவும். இதிலுள்ள பல பெயர்களை பூததாமர என்ற நூலில் காணலாம். இந்த பெயர்களை பயன்படுத்தி இவனை வழிபடலாம்.
ஸுராந்தக - கடவுள்களைக் கூட கொல்பவன்.
யமாந்தக - யமனைக் கூட கொல்பவன்.
ப்ரமதேச.
மஹாபீம.
மஹாப்ரகிரம.
த்ரிலோச்ன - மூன்று கண்களையுடையவன்.
மஹாக்ரோதாதிபதி.
பூததாமர -அசாதாரணமானவன்.
ப்ரளயக்னிஸமப்ரப - பிரளய அக்கினிக்கு சமமானவன்.
ஸர்வஸத்த்வாம்ப்ரதேசிக - ஸர்வ ஸத்த்வத்தையும் தேகத்திலுள்ளவன்.
த்ரைலோக்யபூஜித - மூன்று லோகத்தினராலும் பூஜிக்கப்படுபவன்.
த்ரைலோக்யமஹாஅதிபதி.
தேவாதிதேவ.
ஸுராதிஸுர.
மஹாவிக்ர்ரிதரூப - மஹாரூபமில்லாதவன்.
ஸர்வப்ரஸத்த்வ.
ஸமஸ்ததுஷ்டசமண - பாவியை கொல்பவன்.
வ்யோமவக்த்ர - சொர்க்கத்தின் முகபாவம், முகத்தோற்றம்.
ஸர்வலோகபயங்கர - ஸர்வலோகத்தையும் பயம் காட்டுபவன்.
ஸுராஸுரநமஸ்க்ர்ரித - சூர அசுரர்களால் வணங்கப்படுபவன்.
த்ரிஜகதவந்த்தேவேச - மூன்று லோகத்தினராலும் வழிபடப்படுபவன்.
ஸுராஸுரபயப்ரத - சூர அசுரர்களுக்கு பயம் காட்டுபவன்.
ஸுராஸுரஜகத்வந்த்ய - சூர அசுரர்களால் வழிபடப்படுபவன்.
ஜகதாமுபகாரகத்ரிஜகதவந்த்தேவேச.
ஸுராஸுரஜகத்த்ரானதாயக.
ஸுரேச்வர.
த்ரஜகத்வந்த்யதேவேச.
தேவதேவேச.
அபராஜிதநாத - எவராலும் வெல்ல முடியாதவன்.
ஸ்ஷ்டிஸ்திதிலயாத்மக.
பூதேச.
ப்ரமேசன.

• அவனின் சரியான படம் கிடைக்காததால் வஜ்ர பைரவனின் படத்தை தந்துள்ளேன். மேலே சொன்ன மஹாக்ரோதராஜாவின் குணாதிசயங்களை வைத்து கற்பனை செய்து பார்க்க.


இவனுக்கு முன்னால் நின்று பார்த்தால். கண்இமை, வாய் ஓரங்களில் வஜ்ர பொறி பறக்கிறது. முடி எப்படி மேலே எழும்பி நிற்கிறது என்று காட்டுவதற்கு இந்த படம்.

எப்படி கட்வாங்கம் வைத்திருக்கும் கையில் யானை தோலின் கால் பகுதியை மேல் இடது கையில் வைத்திருக்கிறான் என்று காட்ட இந்த படம்.


• பbaந்தூdhuக - நாகபூ. மாரக்களின் - படுகொலை செய்யப்பட்டவரின்.
• உச்சரிப்பு - டḍaமரு மேளம், ப்ரமதேtheச, மஹாபீbhiம, த்ரிலோச்chன, மஹாக்ரோதாதிபதி, ப்ரளயக்னிஸமப்ரப, ஸர்வஸத்த்வாம்ப்ரதேdeசிக, த்ரைலோக்யமஹாஅதிdhiபதி, ஸsaமஸ்sததுஷ்டசமண, த்ரிஜகgaதdவந்த்dதேdeவேச, ஸுராஸுரபயப்ரதda, ஸுராஸுரஜகgaத்வந்த்dய, ஜகgaதாdமுபகாரகத்ரிஜகgaதdவந்த்dதேdeவேச, ஸுராஸுரஜகgaத்dத்ரானதாdaயக, த்ரஜகgaத்dவந்த்dயதேdeவேச, அபராஜிதநாதtha, ஸ்ஷ்டிஸ்திthiதிலயாத்மக.
• அடுத்த பதிவில் மஹாக்கோதராஜா இஷ்டதெய்வமாக வணங்குவது எப்படி என்று பார்க்கலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக