ஸ்வர யோகா. மூக்குத் துவாரங்களை அறிதல்

ஸ்வர யோகா. மூக்குத் துவாரங்களை அறிதல்

ஸ்வர யோகா என்பது தந்த்ர சாஸ்த்ரத்தில் ஒரு பாகமாகும். இதை யோகிகள் உபயோகிப்பதுண்டு. இந்த பதிவில் பார்க்க இருப்பது மாந்த்ரீகத்துடன் (36 கர்மாக்களுடன்) தொடர்புடையவைகளை மட்டுமே. தந்த்ரத்தில் உடலில் வலது பக்கம் ஆண் என்றும் இடது பக்கம் பெண் என்றும் அழைக்கப்படுகிறது. இதையே அர்தநாரீச்வர் உருவம் காட்டுகிறது, சிவன் வலதும் சக்தி இடதும்.

மனித ஒரு போதும் ஒரே நேரத்தில் இரு மூக்கு துவாரங்களால் சுவாசிப்பதில்லை. தந்த்ரத்தின் படி ஒவ்வொரு மணித்தியாலத்திற்கொருக்கா சுவாசம் இடது வலது என்று மாறிக் கொண்டேயிருக்கும். ஒரு மணித்தியாலத்துக்கு 60x15 = 900 (900 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்).

ஏதாவது ஒரு மூக்கு துவாரத்தில் முதல் சுவாசம் தொடங்கும் போது 20 நிமிடங்கள் (300 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) நிலம் ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 16நிமிடங்கள் (240 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) நீர் ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 12நிமிடங்கள் (180 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) நெருப்பு ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 8நிமிடங்கள் (120 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) காற்று ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த 4 நிமிடங்கள் (60 உள்இழுத்தல் வெளிவிடுதலாகும்) ஆகாயம் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஹோமம் செய்யும் நாளும் மூக்குத் துவாரமும், விதிமுறைகளும்:
திங்கள், புதன், வியாழன், வெள்ளி - சந்திர நாட்களென்று அழைக்கப்படும். இந்த நாட்களில் பெண் ஆற்றல் பிரபஞ்சத்தில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் இந்த நாட்களில் பெண் தெய்வங்களின் மந்த்ரங்கள் மட்டுமே ஹோமம் செய்ய வேண்டும். இந்த நாட்களில் இடது மூக்குத் துவாரத்தால் மட்டுமே சுவாசித்துக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். சுவாசத்தில் நிலம் ஆதிகத்திலிருக்கம் போது ஹோமத்தை தொடங்க வேண்டும்.
செவ்வாய் சனி ஞாயிறு - சூரிய நாட்களென்று அழைக்கப்படும். இந்த நாட்களில் ஆண் ஆற்றல் பிரபஞ்சத்தில் ஆதிக்கம் செலுத்தும். அதனால் இந்த நாட்களில் ஆண் தெய்வங்களின் மந்த்ரங்கள் மட்டுமே ஹோமம் செய்ய வேண்டும். இந்த நாட்களில் வலது மூக்குத் துவாரத்தால் மட்டுமே சுவாசித்துக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். சுவாசத்தில் நிலம் ஆதிகத்திலிருக்கம் போது ஹோமத்தை தொடங்க வேண்டும்.

உதாரணத்துக்கு மந்த்ரத்தில் ஆண் தெய்வமிருக்கிறது. ஹோமம் செய்ய வேண்டிய நாள் சூரிய நாள். ஆகவே வலது மூக்கு துவாரத்தினால் சுவாசிக்க வேண்டும். உங்களுடைய சுவாசம் வலது மூக்கினுடாக இருப்பதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் இதில் நிலம் தான் ஆதிக்கம் செலுத்கிறதா என்று தெரியவில்லை !. இலகுவான முறை - பஞ்சை எடுத்து வலது மூக்கு துவாரத்தை மூடிக் கொண்டு இடது மூக்குத் துவாரத்த்தினால் சிறிது நேரம் சுவாசிக்க வேண்டும். அதன் பின் வலது மூக்கு துவார பஞ்சை எடுத்து விட்டு இடது மூக்கு துவாரத்தை பஞ்சால் மூட உங்களுக்கு தேவையான சுவாசம் வலது மூக்கிலும், நிலம் ஆதிக்கத்திலுமிருக்கும். உடனே ஹோமம் செய்ய தொடங்க வேண்டும். உங்களுடைய சுவாசம் இடது மூக்கினுடாக இருப்பதாக எடுத்துக் கொள்வோம் இடது மூக்கை பஞ்சால் மூட உங்களுக்கு தேவையான சுவாசம் வலது மூக்கிலும், நிலம் ஆதிக்கத்திலுமிருக்கும். உடனே ஹோமம் செய்ய தொடங்க வேண்டும்.

பெண் தெய்வத்தின் மந்த்ரத்தை சூரிய நாளில் ஹோமம் செய்தால் அல்லது ஆண் தெய்வத்தின் மந்த்ரத்தை சந்திர நாளில் ஹோமம் செய்தால், இப்படி தெரியாத்தனமாக செய்தால் என்ன நடக்கும் ? சித்தி கிடைக்காது, உடல் உளையும்/வலிக்கும் ஏனென்றல் ஒவ்வாத ஆற்றல். இதை சரி செய்வது எப்படி? செத்தல் மிளகாய் உப்பு கெஞ்சமெடுத்து தலை உடம்பில் பல பாகங்களை மூன்று முறை சுற்றி எரியும் நெருப்பில் போட வலி போகும். வலி போகாவிட்டால் தொடர்ந்து 4, 5 நாட்கள் செய்து வர கண்டிப்பாக உடல் வலி போகும்.

• அர்தdhaநாரீச்வர்(சமஸ்) - அர்த்தநாரீச்வரர்(தமிழ்).
• மூக்கு துவாரத்தை மாற்றுமின்னுமொரு முறை - இடது பக்கவாட்டில் படுத்திருக்க சுவாசம் வலது மூக்குத் துவாரத்தின் மூலமிருக்கும். வலது பக்கவாட்டில் படுத்திருக்க சுவாசம் இடது மூக்குத் துவாரத்தில் இருக்கும். இப்படி படுத்து உங்களுக்கு தேவையான மூக்குத் துவாரத்தை மாற்றிக் கொள்ளளாம்.
• 36 கர்மாக்களை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

2 கருத்துகள்:

  1. ஸ்ம்பனம், மரணம் - நிலம் ஆதிக்கமாகும் போதும்
    வசியம் - நீர் ஆதிக்கமாகும் போதும்
    வித்வேஷணம் - நெருப்பு ஆதிக்கமாகும் போதும்
    உச்சாடனம் - காற்று ஆதிக்கமாகும் போதும்  
    செய்ய வேணடும் என்று தாமர தந்த்ர (இந்த நூல் தந்த்ர புத்தகங்கள் என்ற உங்கள் பதிவிலுள்ளது) என்ற நூலில் செல்லப்பட்டுள்ளது உங்களுடைய இந்த பதிவில் எல்லா கர்மங்களுக்கும் நிலம் ஆதிக்கமாகும் போதும் செய்ய வேண்டும் செல்லப்பட்டுள்ளது விளக்கம் தர முடியுமா? நீர் நெருப்பு, காற்று ஆதிக்கத்தை எப்படி தெரிவு செய்வது? நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1)அந்த புத்தகத்திலிருப்பது எனக்கு தெரியாமலில்லை. என் அனுபவத்தில், எல்லா கர்மங்களுக்கும் நிலம் ஆதிக்கதில் எடுத்ததில் சித்தியே கிடைத்தது. அதாவது என் அனுபவத்தையே எழுதியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் அந்த நூலின்படி செய்து பார்க்கலாம்.

      2)இடதோ வலதோ நிலம் ஆதிக்கம் தொடங்கி 20 நிமிடம் கழிய நீர் ஆதிக்கம் தொடங்கும். அதாவது நில ஆதிக்கம் முடந்ததும் நீர் ஆதிக்கம் தொடங்கும். 20 நிமிடம் கழித்து ஹோமம் செய்ய வேண்டும். இதுவே நீர் ஆதிக்கம்.
      36 நிமிடம் கழிய நெருப்பு ஆதிக்கம் தொடங்கும். அதாவது நிலம், நீர் ஆதிக்கம் முடந்ததும் நெருப்பு ஆதிக்கம் தொடங்கும். 36 நிமிடம் கழித்து ஹோமம் செய்ய வேண்டும். இதுவே நெருப்பு ஆதிக்கம்.
      48 நிமிடம் கழிய காற்று ஆதிக்கம் தொடங்கும். அதாவது நிலம், நீர், நெருப்பு ஆதிக்கம் முடந்ததும் காற்று ஆதிக்கம் தொடங்கும். 48 நிமிடத்திற்கு பின் உடனே ஹோமம் செய்ய வேண்டும். இதுவே காற்று ஆதிக்கம்.

      நீக்கு