வாழ்க்கையில் பரிபூர்ணம் பெற மந்த்ரம்
" ஓம் ஜயம் ஜய ஸுஜயம் மஹாகாருணிக விச்வரூபிணே ஆகச்ச ஆகச்ச ஸமயஅனுஸ்மர ஸர்வ அர்தாச்ச மே ஸித்த்யந்து மந்த்ரபடாஃ மனோரதம் ச மே பரிபூரய ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தில் ஸித்தி அடைந்தவருக்கு மந்த்ர சாஸ்த்திரங்களில் ஸித்தி கிடைக்கும், எல்லா செல்வங்களும் கிடைக்கும், காய் பழுத்து பழமாவது போல் மனதிலுள்ள ஆசைகள் நிறைவேறும், சாதாரண நபர் அசாதாரண நபராகலாம், வழ்க்கையில் பரிபூர்ணமுண்டாகும்.
• இது ஒரு குமர கடவுளின் மந்த்ரம் (முருகன்).
• பொருளும், உச்சரிப்பு:
ஓம் ஜயம் ஜய ஸுsuஜயம் - வெற்றி வெற்றி அதிவெற்றி, மஹாகாருணிக - இரக்கமுள்ளவனே, விச்śவரூபிணே - பலரூபமே, ஆகgaச்cசcha ஆகgaச்cசcha - வா வா, ஸsaமயஅனுஸ்sமர - சமய உடன்படிக்கைபடி, ஸsaர்வ அர்தாthāச்ś சca - எல்லா செல்வங்களுடன், மே - எனக்கு, ஸிsiத்dத்dhயந்து மந்த்ரபடாdāஃ - மந்த்ரபாடங்களில் ஸித்தி, மனோரதthaம் சca - மனதிலுள்ள ஆசைகளையும், மே - எனக்கு, பரிபூரய - பரிபூர்ணமாக்கு ஸ்sவாஹா.
• ஸமக்ரி - 500 கிராம் 32 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம்,வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். பின் அப்படியே பணம் அதிகரிக்கும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்ம மந்த்ரமாகும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக