காலராத்ரீயின் உச்சாடன மந்த்ரம்

காலராத்ரீயின் உச்சாடன மந்த்ரம்

" ஓம் ப்லும் ம்லும் க்ஷ்லும் காலராத்ரீ மஹாத்வாங்க்ஷீ அமுகம் ஆசுச்சாடய ஆசுச்சாடய சிந்தி சிந்தி பிந்தி பிந்தி ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும்.  அமுகம் என்ற இடத்தில் எவரை வசிப்பிடத்தை விட்டு உச்சாடனம் செய்ய வேண்டுமோ அவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய, அந்த நபர் உச்சாடனமாகி மற்றவர்களை சண்டைக்கு இழுத்து, பைத்தியம் பிடித்தவன் போல் ஊரூராய் பரதேசி போல் சுற்றித் திரிவான்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• வாடகைக்கு இருக்கும் நபர்கள், இருக்குமிடத்தை காலி பண்ண மறுக்கும் போதும் இப்படிப்பட்ட உச்சாடன மந்த்ரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திருநீறுக்கு உச்சாடன மந்த்ரத்தை ஜபித்து, வீட்டு வளாகத்தில் தூவ, உச்சாடனமுண்டாகும். அதன்பின் அந்த வீட்டில் சொந்தக்காரனுட்பட எவராலும் வசிக்க முடியாமல் போகும். அந்த வளாகத்தில் புல், செடி, கொடி, மரங்களின் வளர்ச்சியும் குன்றிப் போகும். அந்த இடமொரு சூனியம் பிடித்தது போல் இருக்கும். மீண்டுமங்கு வாழ, சிறப்பான சாந்தி செய்ய வேணடும். உச்சாடன மந்த்ரங்கள் மூலம் எதிரி நாட்டு ராணுவத்தையும் விரட்டலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை). திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி). கிழமை - வெள்ளி.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், கடுகு ஆஹுதியாக போடவும். எரிபொருள் - கடுகு எண்ணை. விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ப்bலும் ம்லும் க்ஷ்kṣலும் காலராத்ரீ, மஹாத்dhவாங்க்ஷீkṣī - மஹா காகமே, அமுகம், ஆசுśu + உச்cசாcāடய ஆசுśu + உச்cசாcāடய -  உடனே உச்சடனமாக்கு உடனே உச்சடனமாக்கு, சிchiந்திdhi சிchiந்திdhi  - சிந்திப்போ சிந்திப்போ (சிதறிப்போ), பிbhiந்திdhi பிbhiந்திdhi - பிந்துவாகு பிந்துவாகு, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• உச்சாடன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக