வித்வேஷண மந்திரம்

வித்வேஷண மந்த்ரம்

" ஓம் நமோ பகவதே ஸ்ரீ உட்டாமரேச்வராய அமுகஸ்ய அமுகேன ஸஹ வித்வேஷய வித்வேஷய ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுக என்ற இடத்தில்  எந்த நபர்களிடையே விரோதத்தை உண்டாக்கி பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களின் பெயரை வைத்து ஜபம் செய்ய விரோதம் பகைமை உண்டாகி பிரிந்து போவர். அதாவது வித்வேஷணமுண்டாகும்.

• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• அமுகஸ்ய அமுகேன ஸஹ என்றால் இன்னாரை  இன்னாருடன் என்று பொருள். உதாரணத்துக்கு கவிதாவையும் முகிலனையும் பிரிக்க வேண்டுமென்றால், கவிதாஸ்ய முகிலனேன ஸஹ என்றோ அல்லது தமிழில் கவிதாவை முகிலனுடன் என்றோ வைதத்து ஜபம் செய்யலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - க்ரிஷ்மகாலம் (வைகாசி 15லிருந்து, ஆனி ஆடி 15வரை). திதி - துவிதியை தேய்பிறை (2வது திதி) அல்லது சஷ்டி தேய்பிறை (6வது திதி). கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ பbhaகgaவதே ஸ்ரீśrī உட்ḍடாḍāமரேச்śவராய அமுகஸ்sய அமுகேன, ஸஹ -  உடன், வித்dவேஷṣaய வித்dவேஷṣaய, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• வித்வேஷண கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக