தந்த்ர புத்தகங்கள்
எப்படி ஒரு புத்தகத்தின் பெயரில் பல ஏடுகள் உள்ளன? முதல் ஏட்டிலிருந்து சீடர்கள் நகல் செய்வர். பின்பு வேறு சில தந்த்ர பள்ளிக்கூடங்களால் நகல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் பௌத்தமதத்தினர் நகல் செய்வர். இப்படி நகல் செய்யப்பட்ட ஏடுகளில் எழுத்து பிழைகள் உண்டாகியிருக்கும். பின்னர் சில காலங்ள் கழிய இவைகளில் பல ஏடுகள் ஒரு இடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கப்படும். ஆராச்சியாளர்கள் தொகுப்பாளர்கள் ஆராயும் போது ஒரு புத்தகத்தின் பெயரில் பல ஏடுகள் அவர்களுக்கு கிடைக்கும். அவர்களுக்கு ஒரு புத்தகத்தின் பெயரிலுள்ள பல ஏடுகளை ஆராய்ந்து சரியான கருத்துடன் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட வேண்டி இருக்கும். தந்த்ரத்தில் மிக அனுபவம் வாய்ந்த ஆசானால் மட்டுமே சரியாக கருத்துடன் மொழிபெயர்க்க முடியும்.
வழமையாக தந்தர புத்தகங்கள் பைரவ/சிவ பைரவீ/உமாதேவீ உரையாடலிலே எழுதப்பட்டுயிருக்கும்.
சில குருக்கள் தாங்களாகவே தந்த்ர புத்தகங்களை எழுதி, தங்கள் ஆன்மீக பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவது உண்டு. ஒரு உதாரணத்திற்கு 'காயத்ரீ தந்த்ர' என்ற புத்தகம். இப்படிப்பட்ட புத்தகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மொழிபெயர்ப்பில் அரசியலை சேர்த்தல் - "பிருகு முனிவர் மாந்திரீகம்" என்ற புத்தகத்தில் கடைசிப்பாட்டில் மறைந்த மு.அமைச்சர் ஜெயலலிதாவின் புகழ் பாடப்படுகிறது.
வியாபார நோக்கத்திற்காக மலையாளம் என்ற சொல்லை சேர்ப்பது - உதாரணத்திற்கு இந்த புத்தகம் "கருவூரார் அருளிச் செய்த மலையாள மாந்திரீக ஹரிச்சுவடி". மேலும் "மலையாள மாந்திரீகம்" என்ற புத்தகத்திலுள்ளவைகளை செய்வதன் மூலம் வெற்றியை தருமென்பது சாத்தியமற்றது. தண்டச் செலவு மட்டுமே.
ஒரு சில பிராமணர்களின் மொழியெயர்ப்பு - தங்களுக்கு எது வேண்டுமோ, அந்த கருத்துக்களை புகுத்தி மொழியெயர்ப்பது.
1. பூத டாமர தந்த்ர - பூத அசாதாரண (ஆச்சரியமூட்டும்) தந்த்ரம் என்று பொருள். முழுக்க முழுக்க ஆவாஹன ஸாதனை பற்றி எழுதப்பட்ட புத்தகம். இந்த புத்தகத்திற்கு மிஞ்சிய வேறு ஒரு புத்தகம் இவுலகத்திலிருக்க முடியாது. இந்த புத்தகம் மட்டுமே தெட்ட தெளிவாகக் கூறுகிறது ஒவ்வொரு ஆவாகண ஸாதனையிலும் தெய்வங்களை எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று - தாய், மனைவி, சகோதரீ அல்லது வேலைக்காரீ/ன். க்ரோதபைரவனுக்கும் க்ரோதபைரவீக்கும் இடையிலான உரையாடலிலே எழுதப்பட்டுள்ளது. இப் புத்தகத்தில் பதினாறு அத்தியாயங்களுள்ளன அவைகள் பின்வருமாறு 1. இந்த புத்தகத்தின் மஹிமை கூறப்படுகிறது. 2 தெய்வ மரணம் உயிர்பிக்கும் மந்த்ரம், தெய்வங்கள் சத்தியம் செய்கின்றன ஸாதனையில் தோன்றா விட்டால் கொன்று விடச் சொல்லி. 3. எட்டு ஸுந்தரீ ஸாதன. 4. எட்டு ச்மசானவாஸினீ ஸாதன 5. எட்டு காத்யாயனீ ஸாதன 6. ஸ்ரீ மண்டலம் (யந்த்ரம்) செய்யும் முறை, மஹாக்ரோதராஜா வணங்கும் முறை. 7. கிங்கார ஸாதன (தெய்வத்தை அடிமையாக்கி வேலை வாங்குதல்). ஆவாகண மந்த்ரங்கள் மறைக்கப்பட்டு விட்டன 8. சேட்டிகா ஸாதன 9. எட்டு பூதினீ ஸாதன 10. எப்படி பிரம்மா போன்ற கடவுள்களை கொல்வது. எட்டு அப்ஸரஸ் ஸாதன. 11. எட்டு யக்ஷிணீ ஸாதன. 12. எட்டு நாகினீ ஸாதன 13. ஆறு கின்னரீ ஸாதன. 14. பரிச மண்டலம் செய்யும் முறை 15. மூன்று யக்ஷ ஸாதன, ஸாதன விதிகள். 16. யோகினீ ஸாதன, இங்கு யக்ஷிணீ ஸாதன எழுதப்பட்டு உள்ளது, ஸாதன செய்ய நேர காலம். புத்தகம் முற்று பெறுகிறது. இப் புத்தகத்தில் கூறப்படுகிறது எண்ணற்ற கருப்பையிலிருந்து உருவானது இத்தகைய மஹா பூத டாமர தந்த்ரம்.
இந்த புத்தகத்தை பௌத்தமதத்தினர் சொந்தம் கொண்டாடுவதுண்டு மேலே சொல்லப்பட்டதின்படி பௌத்தர்களால் நகல் செய்யப்பட்டதின் காரணமாகவே அப்படிப்பட்ட கருத்து நிலவுகிறது. பூத தாமர தந்த்ர 100% சைவ தந்தரர்களுடையது.
இப் புத்திலிருந்தே ஆணித்தரமான ஆதாரம் :
பௌத்தம் - பூஷாணஸுந்தரீ மந்த்ரம் "ஓம் பூஷாணஸுந்தரீ க்லீம் ஸ்வாஹா"
சைவம் - பூஷாணஸுந்தரீ மந்த்ரம் "அனாதி பீஜ சொல்லப்பட்டு பின்பு பூஷாணா என்று சொல்லி ஸூந்தரீ சொல்லப்பட்டு அதன் பின் ஸாதகர் காமபீஜத்தை சொல்லி, மனைவி அக்னியை சேர்க"
அதாவது பொருள் "ஓம் பூஷாணஸுந்தரீ க்லீம் ஸ்வாஹா".
எழுதப்பட்ட பாணியிலே புரிகிறது பௌத்தர்கள் சைவத்திலிருந்தே நகல் செய்து உள்ளனர் என்று.
ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு சில எழுத்து பிழைகளுண்டு. கருத்து பிழைகளுமுண்டு உதாரணத்துக்கு வஜ்ரம் வைத்திருப்பவனென்றால் க்ரோத பைரவனை குறிக்கும். ஆனால் மொழிபெயர்த்தவர் வஜ்ரபாணியை (யக்ஷகுலத்தை சேர்ந்தவன்) குறிப்பிடுகிறார். இது மிகப் பெரிய பிழையாகும். வஜ்ரபாணி என்றாலும் வஜ்ரம் வைத்திருப்பவனென்று பொருளாகும் ஆனால் இந்த இடத்தில் பொறுத்தமற்ற அர்த்தமாகும். புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.
2. டாமர தந்த்ர - அசாதாரண (ஆச்சரியமூட்டும்) தந்த்ரம் என்று பொருள். ஷட் கர்மம், சில யக்ஷிணீகளுடைய ஸாதன. ஜிவாச்ம ஸாதன. புத்தகத்தை சமஸ்கிதத்திலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்.
3. உட்டீச தந்த்ர - ஷட் கர்மம், சில யக்ஷிணீகளுடைய ஸாதன. இந்த தந்த்ரதில் ராவணன் தந்த்ரம் பற்றி கேட்ட அதற்கான விடையை சிவபொருமான் கூறுகிறார்.
இந்த புத்தகத்திற்கு பல தொகுப்பாளர்களுள்ளனர், தொகுப்பாளருக்கு ஏற்றபடி புத்தகத்தில் அடங்கியுள்ளவைகள் சிறிதளவில் மாறுபடுகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில் ஒரு சில எழுத்து, கருத்து பிழைகளுள்ளன. புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.
4. கக்ஷபுட தந்த்ர - ஒளித்து வைத்திருந்த தந்த்ரம் என்று பொருள். யக்ஷிணீ ஸாதன தொடக்கத்தில் யக்ஷிணிகளை தாய், மனைவி, சகோதரீயாக ஏற்று கொள்ளளாமென்று குறிப்பிடப்படுகிறது. கிட்டத்தட்ட 25 யக்ஷிணீகளின் ஸாதன, சில பிசாசினீகளின் ஸாதன, ஷட் கர்மம், அஞ்ஜம், புதையலை கண்டு பிடித்தல், மாயமாய் மறைதல், இந்த்ரஜாலம். வஜ்ர அஸ்த்ரம், ப்ரஹமாஸ்த்ரம், அக்னி அஸ்த்ரம் போன்ற என்னும் சில ஆயுதங்களை தெய்வத்திடமிருந்து பெறும் ஸாதன கூறப்படுகிறது.
இந்த புத்தகத்தை ஸித்த நாக அர்ஜூன் தந்த்ரமென்றும் அழைப்பதுண்டு ஏனென்றால் இப் புத்தகத்தை எழுதியவர் தமிழ் ஸித்தர் நாக அர்ஜூன். நாக அர்ஜூனை பௌத்த மதத்தினர் சொந்தம் கொண்டாடுவதுண்டு. உண்மையில் அப்படியெல்லாமில்லை, அதெப்படியென்றால் நாக அர்ஜூன் தன் எழுதிய எல்லா புத்தங்களிளும் சிவனையும் சரஸ்வதியையும் வணங்கிவிட்டு எழுதுகிறேனென்று குறிப்பிடுகிறான்.
புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். இப் புத்தகத்திலிருந்து யப்பானிய நாட்டு பெண்மணியால் மூன்று அத்தியாயங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவையாவன யக்ஷிணீ ஸாதன, மந்த்ர ஸாதன, செத்தவரை பிழைக்க வைத்தல். இவைகளையும் தந்துள்ளேன் தரவிறக்கம் செய்து படிக்கவும்.
5. உட்டாமேச்வர தந்த்ர - ஷட் கர்மம், கிட்டத்தட்ட 35 யக்ஷிணீ, பிசாசினீகளின் ஸாதன.
புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன்.
6. மந்த்ர மஹோததி - அதிக பக்கங்களை கொண்ட புத்தகம், ஷட் கர்மம், சில யக்ஷிணீகளின் ஸாதன.
புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன். ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.
7. காமரத்ன தந்த்ர - ஷட் கர்மம், சில யக்ஷிணீகளின் ஸாதன.
புத்தகத்தை சமஸ்கிதத்திலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்.
8. ஷட்கர்ம தீபிகா - ஷட் கர்மம்.
கீழே உள்ள "இந்த்ர ஜால வித்யா ஸம்க்ரஹ" என்ற புத்தகத்தில் இதுவுமெரு புத்தகம்.
9. ராவண ஸம்ஹிதா - ஷட் கர்மம்.
ஆங்கிலத்தில் வாங்கிப் படிக்கவும்.
10. இந்த்ர ஜால வித்யா ஸம்க்ரஹ - இந்த புத்தகம் ஐந்து தந்த்ர புத்தகங்களை அடங்கியது அவையாவன தத்த இந்த்ர ஜால சாஸ்த்ர, காமரத்ன தந்த்ர, தத்தாத்ரேய தந்த்ர, ஷட்கர்ம தீபிகா, ஸித்த நாக அர்ஜூன் தந்த்ர.
புத்தகத்தை சமஸ்கிதத்தில் தந்துள்ளேன்.
• மேலே உள்ள ஏட்டு புத்தங்களை தரவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்.• மேலும் இந்த புத்தகங்களையும் பார்க்கவும். பரிந்துரைப்பு ! விஜ்ஞான பைரவ தந்த்ர, முண்டமால தந்த்ர, குலர்ணவ தந்த்ர, மஹாநிர்வாண தந்த்ர, கங்கால மாலினீ தந்த்ர, சாரதா திலக தந்த்ர, அகோரி தந்த்ர, இந்த்ரஜாலம், ப்ரிஹத் இந்த்ரஜாலம், இச்ச சக்தி ஒஜ்ஹ இந்த்ரஜாலம் புத்தங்களை தரவிறக்கம் செய்ய இங்கே தட்டவும். • தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களை தரவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்.• புத்தகங்கள் யாவும் திறந்த இணையக விலாசத்திலிருந்து சேகரிக்கப்ப்டவை.
• உச்சரிப்பு : பூbhuத டாḍāமர தந்த்ர, உட்ḍடீḍīசśa தந்த்ர, உட்ḍடாḍāமேச்śவர தந்த்ர, மந்த்ர மஹோதdaதிdhi, தdaத்த இந்த்ர ஜால சாஸ்த்ர, தḍaத்தாத்ரேய தந்த்ர. ப்bரிஹத்d இந்த்ரஜாலம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.