காயத்ரீ மந்த்ரத்தில் ஸித்தி பெறும் முறை
ஓம் பூர் புவஃ ஸ்வஃ
தத் ஸவிதுர் வரேண்யம்
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ னஃ ப்ரசோதயாத்.
இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தி கிடைக்கும்.
• இந்த மந்த்ரம் ர்ரிக் வேதத்தில் வரும் ஒரு மந்த்ரம், ர்ரிக் வேதம் மண்டலம் 3.62.10. இது ஒரு அபரீத சக்தி வாய்ந்த மந்த்ரம். இதை மஹாமந்த்ரமென்று அழைப்பதுண்டு. இந்த மந்த்ரம் ஹோமம் சொய்யாமலே நாளொன்றுக்கு 108 தடவை ஜபம் சொய்தாலே பயன்தரக் கூடிய ஒரே மந்த்ரம். அந்த பயன்களாவன - தமிழ்நாடு போன்ற மூன்றாமுலக நாடுகளில் வாழ்பவர்களுக்கு எப்பவும் அரசாங்கம், காவல், ராணுவம், அதிகாரத்திலுள்ளவர்களால், பணக்காரர்களால், ரௌடிகளால், ஐாதி மதம் பிடித்தவர்களால், பயங்கரவாதிகளால் இருந்து வரும் தொல்லைகள் முற்றிலும் நீங்கும். துரோகிகள், எதிரிகள் விலகுவர். குற்றம் சொய்யாமல் குற்றம் சாட்டுவதிலிருந்து, பொய் வழக்குகளிருந்து, வீண்வம்பிலிருந்து விடுபடலாம் அல்லது வராது. விபத்துக்கள், விலங்குகள், ஊர்வண இவற்றிலிருந்து முழு பாதுகாப்பும் கிடைக்கும். அச்சங்கள், சந்தேகங்கள், பாதுகாப்பின்மை ஆகியவற்றை நீக்கும். நோயெதிர்ப்பு சக்கதியை அதிகரிக்கும். வாழ்க்கையில் அமைதி சௌபாக்கியமுண்டாகி வாழ்க்கை மேன்படும். துரதிஷ்டம் நீங்கி பாக்கியமுண்டாகும். சில உதாரணங்கள் ஒரு பெண் தொலைபேசி ஒரு மாதத்திற்கு மேல் பாவிப்பதில்லை, ஒன்று உடைந்து போகும் அல்லது தொலைந்து போகும் அந்த பெண் காயத்ரீ மந்த்ரம் சொல்வதன் மூலம் இப்பொழுது அந்த பெண்ணுக்கு அப்படி நடப்பதில்லை. ஒரு ஆண் ஒரு இடத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் வேலை செய்வதில்லை அந்த ஆண் காயத்ரீ மந்த்ரம் சொல்வதன் மூலம் இப்பொழுது அந்த ஆண் நிரந்திரமாக வேலை பார்க்கிறான்.
எப்படி ஜபம் சொய்வது ?அறைக்குள் ஒரு விளக்கேற்றி அல்லது அதிகாலையில் சூரியனை நோக்கியவாறு இருந்தது கொண்டு ஜபம் செய்யலாம். குறைந்தது 108 தடவையாவது ஜபிக்க வேண்டும்.
இந்த மந்த்ரத்தை ஹோமம் செய்பவர்களுக்கு இந்த மந்த்ரத்தின் மாயை சக்தி கிடைக்கும் அதாவது நோய்களை குணமாக்கலாம், கெட்டவர்கள் விலகுவர், கெட்டசக்திகளை அண்டாது. கெட்டசக்திகளை மற்றவர்களிடமிருந்து விரட்டலாம். கெட்டகனவு, உளவியல் பிரச்சனைகளை போக்கலாம். பாம்பு, தேள் கடித்தவரின் விஷத்தை நீக்கலாம். தேஜஸ் உண்டாகும். வசிகரிக்கும் தன்மை அதிகரிக்கும். மற்றவர்கள் பணிந்து நடப்பர், அன்பு சொலுத்துவர். காரிய ஸித்தியுண்டாாகும், செல்வம் கூடும்.
• ஹோமம் செய்யும் போது மந்த்ரத்தின் முடிவில் ஒவ்வொரு தடவையும் "ஸ்வாஹா" என்ற சொல்லை சேர்த்து ஹோமம் செய்யவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
இந்த மந்த்ரம் காயத்ரீ மந்த்ரமாயிருந்தாலும் கூட இந்த மந்த்ரத்தை சூரியனுக்கு உரிய மந்த்ரமாக எதுவித விவாதமில்லாமல் ஏற்றுக் கொள்வோம்.
இந்த மந்த்ரம் காயத்ரீ மந்த்ரமாயிருந்தாலும் கூட இந்த மந்த்ரத்தை சூரியனுக்கு உரிய மந்த்ரமாக எதுவித விவாதமில்லாமல் ஏற்றுக் கொள்வோம்.
நோய், கெட்டசக்தி, விஷ நிவர்த்தி போன்றவைகளுக்கு சாந்தி கர்ம முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும்.
பருவ காலம் - கார்த்திகை 15ம் திகதியிலிருந்து மார்கழி தை 15ம் திகதி வரை.
திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
திதி - பௌர்ணமி, ஏகாதசி (11வதுதிதி).
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமத்தின் பின் ஸித்தி கிடைத்தவுடன்.
நோயை குணப்படுத்தும் முறை:
செம்பில் தண்ணீர் கொஞ்சம் எடுத்து, 108 தடவை காயத்ரீ மந்த்ரத்துடன் " ஐம் பூbhūரி ஹூம்" என்ற பீஜ மந்த்ரங்களை சேர்த்து ஜபித்து அந்த தண்ணீரினால் நோய்வாய்பட்டவரின் முகத்தில் மூன்று முறை அடித்து, மூன்று கரண்டி குடிக்க கொடுக்க நோய் குணமாகும்.
கெட்டகனவு, கெட்டகிரகங்களின் பார்வை ஒழிய, கெட்டசத்திகளை விரட்டும் முறை:
செம்பில் தண்ணீர் கொஞ்சம் எடுத்து, 108 தடவை காயத்ரீ மந்த்ரத்துடன் "நிடி ஹூம்" என்ற பீஜ மந்த்ரத்தை சேர்த்து ஜபித்து அந்த தண்ணீரினால் கெட்டசக்தி பிடித்தவரின் முகத்தில் மூன்று முறை அடித்து, மூன்று கரண்டி குடிக்க கொடுக்க நிவர்த்தியுண்டாகும். மீதமுள்ள தண்ணீரை வீட்டில் தெளிக்க கொடுக்கலாம்.
விஷ நிவர்த்தி செய்யும் முறை:
விஷ நிவர்த்தி செய்யும் முறை:
ஹோமத்தின் பின் ஹோம குந்திலிருந்து சாம்பலை பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். தீண்டிய இடத்தில் அந்த சாம்பலை பூசி செம்பில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு 108 தடவை காயத்ரீ மந்த்ரத்துடன் "ரிடி ஹூம்" என்ற பீஜ மந்த்ரத்தை சேர்த்து ஜபித்து அந்த தண்ணீரரை மூன்று கரண்டி குடிக்க கொடுக்க விஷம் நிவர்த்தியாகும்.
• பணக்காரனாக, காரிய ஸித்திக்கு: பௌஷ்டிக கர்ம முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். கீழே உள்ள மந்த்ரத்தை ஹோமம் செய்ய வேண்டும்.
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை.
திதி - பௌர்ணமி.
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• பணக்காரனாக, காரிய ஸித்திக்கு: பௌஷ்டிக கர்ம முறைப்படி ஹோமம் செய்ய வேண்டும். கீழே உள்ள மந்த்ரத்தை ஹோமம் செய்ய வேண்டும்.
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை.
திதி - பௌர்ணமி.
கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
ஓம் பூர் புவஃ ஸ்வஃ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கே தேவஸ்ய தீமஹி
தியோ யோ னஃ ப்ரசோதயாத் ஸ்ரீśrīம் ஜஃ ஸ்வாஹா
அறிவு வளர: காயத்ரீ மந்த்ரதத்தின் கடைசியில் "ஐம்" என்ற பீஜ மந்த்ரத்தை சேர்த்து ஜபித்து ஹோமம் செய்ய வேண்டும்.
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியுடன் 150கிராம் பனை வெல்லம் சேர்த்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள வெள்ளை சிகப்பு நிற பூக்கள், நெல், எள், வில்வ இலை, தயிர், பாயாசம், பல வகையான பழங்களை தேனில் பிசைந்து அதிலிருந்து கொஞ்சம் இவைகள் எல்லாவற்றையும் ஒவ்வொரு பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• மந்த்ரத்தின் உச்சரிப்பும் பொருளும் :
ஓம் - பிரபஞ்சத்தை உருவாக்கியவன். பூbhūர் - பூலோகம். புbhuவஃ - வேறு (மற்ற) உலகங்கள். ஸ்sவஃ - ஸ்வர்க லோகம்.
தத் ஸsaவிதுர் - யார் பிரகாசமாக ஜொலிப்பவன் (சூரியனைப் போல). வரேண்யம் - வழிபாட்டுக்கு தகுதியானவன், சிறந்த, உயர்ந்தவன்.
பbhaர்கோgo - தெய்வீக ஒளி தெய்வீக பிரகாசம் (பாவத்தை அழிப்பவன்). தேவஸ்sய - தெய்வீக யதார்த்தம். தீdhīமஹி உன்னை தியானிக்கிறோம் வழிபடுகிறோம்.
திdhiயோ - ஆன்மீக மனம் (புத்தி). யோ - இது னஃ - நமது ப்ரசோcoதdaயாத் - அறிவை ஊக்குவிக்கட்டும்.
சுருக்கமாக சொன்னால்:
நாங்கள் பிரகாசமாக ஒளி வீசும் ப்ரம்பொருளை பிரார்த்திக்கிறோம் யார் இப் பிரபஞ்சத்தை இயக்குபவன் வணக்கத்திற்குரியன்! ஒளிமாயமும் அறிவையும் தருபவன். அறியாமை பாவங்களை அழித்து. எங்கள் அறிவை மேம்படுத்து.
காயத்ரீ மந்த்ரத்தை மிகசரியாக மொழிபெயர்க்க முடியாது.
பிழையாக உச்சரித்தால் ஸித்தி கிடைக்காது.
• காயத்ரீ மந்த்ர பாணியில் பொரும்பாலான தெய்வங்களுக்கு மந்த்ரமுண்டு ஒரு உதாரணத்துக்கு த்ரிபுரஸுந்தரீ காயத்ரீ மந்த்ரம்: ஒம் த்ரிபுரஸுந்தரீ வித்மஹே காமேச்வரீ தீமஹி தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்.
• இந்த பதிவில் எழுதியிருப்பது தந்த்ர (தாந்திரீக) முறைப்படி ஸித்தி பெறும் விதமாகும். பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய இயலாமல் போனால் ஒரு 3000 மாவது ஹோமம் செய்ய ஸித்தி கிடைத்து விடும், மீதமுள்ளதை அடுத்த வருடம் ஹோமம் செய்யலாம். ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• இந்த மந்த்ரத்தை பிராமணர்கள், எந்த மார்க்கத்தை கடைப் பிடிப்பவராயிருந்தாலும் சரி சைவம் வைஷ்ணவம்..... கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சொல்ல வேண்டிய மந்த்ரமாகும் அதற்கான விதி முறைகள் வேதத்திலுள்ளது.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக