செத்தவரை உயிர்பிக்கும் ஸித்து விளையாட்டு. ம்ர்ரிதஸம்ஜீவனம்
ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ரக்தகம்பல ஸாதகர் முன் தோன்றுவான். அவனுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவன் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து அவன் ஸாதகருக்கு வேலைக்காரனாக வேலை செய்வான். இறந்த பிணத்தை ஸாதகர் உயிர்பிக்க சொல்ல, அவன் உயிர்பிப்பான். அதுமட்டுமல்ல ப்ரதிமாம்சாலனம் செய்யலாம். ரக்தகம்பல வராமல்போனால் கொல்லப்படுவான்.
ரக்தகம்பல ஆவாகண மந்த்ரம் :
ஓம் ரக்தகம்பலே ப்ரதிமாம்சாலனே ஆஹ்வய ஆகச்ச மம ம்ர்ரிதஸம்ஜீவனம் ஸாதய ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம், ரக்தகம்பலே, ப்ரதிமாம்சாலனே - படத்தில் உள்ளவைகளை அசைய வைப்பவனே, ஆஹ்வய - அழைப்பு, ஆகச்ச - வா, மம - எனக்கு, ம்ர்ரிதஸம்ஜீவனம் - இறந்தவரை உயிர்பித்து, ஸாதய - சாதிப்பாய், ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் ரக்தகம்பலே ப்ரதிமாம்சாchāலனே ஆஹ்வய ஆகgaச்cசcha மம ம்ர்ரிதஸsaம்ஜீவனம் ஸாsāதdhaய ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், மல்லிகைப்பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ரக்தகம்பல என்றால் சிகப்புகம்பளம் என்று பொருள். இவன் நாககுலத்தை சேர்ந்தவன். இவன் ஒரு நாக. தெரியாத்தனமாக இவனை யக்ஷிணீ என்று எண்ணுவதுண்டு. அது முற்றிலும் தவறானதாகும்.
• ப்ரதிமாம்சாலனம் - வரையப்பட்ட படத்தில் உள்ளவைகளை அசைய வைத்தல்.
• ஸாதகர் ஏற்கனவே ரக்தகம்பலத்துடன் கதைத்து வைத்திருக்க வேண்டும். பிணத்தின் வாயில் எழிஞ்சில் தைலம் ஊற்றியவுடன் உடனே பிணத்தை உயிர்பிப்பாய் என்று.
• பாம்பு, விஷ ஜந்துக்கள் கடித்து இறந்த அல்லது இயற்கையாக இறந்தவர் வாயில் எழிஞ்சில் தைலம் விட இறந்தவர் உயிர்பெற்று எழுவார்.
• இப்படி உயிர்தெழுந்தவர் பலமொழிகளில் கதைக்ககூடிய திறமையும், அதிஅறிவு ஆற்றலுடனும், முக்காலம் கூறும் திறமையும் கொண்டவரகயிருப்பர்.
• உடலங்கங்கள் சிதைந்தோ, கெட்டுபோயோ அல்லது இல்லாத பிணத்தை உயிர்பிக்க முடியாது.
• ஹோமம் செய்யும் நாளன்று நல்ல படையல் வைத்து, மதுவும் வைக்கவும். 10வது அஹூதியாக மல்லிகைபூவை ஹோமகுண்டத்தில் போடவும்.
• ம்ர்ரிதஸம்ஜீவனம் - இறந்தவரை உயிர்பித்தல்.
• இந்த ஸாதன ரக்தகம்பலவின் ஆவாகண ஸாதனயாகும். ரக்தகம்பலவின் மந்த்ர ஸாதனையை பார்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக