செத்தவரை உயிர்பித்தெழ வைக்க மந்த்ரம்
" ஓம் ஸ்ப்ர்ரிம் ரக்தகம்பல மஹாதேவீதூத அமுகம் உத்தாபய உத்தாபய ப்ரதிமாம் சாலய சாலய ப்ர்வதம் கம்பய கம்பய லீலய லீலய விலஸ விலஸ ஹூம் ஹ்ரம் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை இருபது நாட்கள் பத்தாயிரம் தடவை ஜபம் செய்து 21 வது நாள் ஆயிரம் மந்த்ரங்கள் ஹோமம் செய்ய ஸித்தியாகும். தேவைப்படும் போது இறந்தவர் பிணத்திற்கு அருகில் சென்று, அமுகம் என்ற இடத்தில் இறந்தவர் பெயரை வைத்து 108 தடவை ஜபிக்க இறந்தவர் உயிர்தெழுவர். அதுமட்டுமல்ல ப்ரதிமாம்சாலனம் செய்யலாம்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு : நக்ஷத்திரம் - பூஷ்ய. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு.
• பொருளும் உச்சரிப்பும் : ஸ்sப்ர்ரிṛம், ரக்தகம்பbaல - சிகப்பு கம்பளம், மஹாதேdeவீ + தூdūத - மஹாதேவீ + தூதுக்காரன், அமுகம் - இப் பெயர்ப்பட்ட நபர். உத்தாthāபய - எழும்பு, ப்ரதிமாம் சாcāலய - படத்தை நகரவை, ப்ர்வதம் - மலையை, கம்பய + லீலய + விலஸsa - குலுக்கு : ஆட்டு + லீலை + கேலி, ஸ்sவாஹா.
• ரக்தகம்பல என்றால் சிகப்புகம்பளம் என்று பொருள். இவன் நாககுலத்தை சேர்ந்தவன். இவன் ஒரு நாக. தெரியாத்தனமாக இவனை யக்ஷிணீ என்று எண்ணுவதுண்டு. அது முற்றிலும் தவறானதாகும்.
• ப்ரதிமாம்சாலனம் - வரையப்பட்ட படத்தில் உள்ளவைகளை அசைய வைத்தல்.
• பாம்பு, விஷ ஜந்துக்கள் கடித்து இறந்த அல்லது இயற்கையாக இறந்தவர் வாயில் எழிஞ்சில் தைலம் விட்டு 108 மந்த்ரங்கள் ஜெபிக்க இறந்தவர் உயிர்தெழுவர்.
• இப்படி உயிர்தெழுந்தவர் பலமொழிகளில் கதைக்ககூடிய திறமையும், அதிஅறிவு ஆற்றலுடனும், முக்காலம் கூறும் திறமையும் கொண்டவரகயிருப்பர்.
• உடலங்கங்கள் சிதைந்தோ, கெட்டுபோயோ அல்லது இல்லாத பிணத்தை உயிர்பிக்க முடியாது.
• ஹோமம் செய்யும் நாளன்று நல்ல படையல் வைத்து, மதுவும் வைக்கவும். 10வது அஹூதியாக மல்லிகைபூவை ஹோமகுண்டத்தில் போடவும்.
• இந்த ஸாதன ரக்தகம்பலவின் மந்த்ர ஸாதனையாகும். ரக்தகம்பலவின் ஆவாகண ஸாதனையை பார்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக