பாதாள அஞ்ஜனம்
இரவு நிகுண்டீ மரத்தடிக்குச் சென்று சிகப்பு சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஐந்த்ரீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " பாதாள அஞ்ஜனம் தா " என்று சொல்ல வேண்டும். அவள் பாதாள அஞ்ஜனம் தாந்துவிட்டு மறைந்து விடுவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.
ஜந்த்ரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஐம் க்லீம் ஐந்த்ரீ மஹேந்த்ரீ ஆகச்ச ஆகச்ச குலு குலு சுலு சுலு ஸ்வாஹா
மந்த்ரதின் பொருள் :
ஓம் ஐம் க்லீம் ஐந்த்ரீ மஹேந்த்ரீ, ஆகச்ச ஆகச்ச - வா வா, குலு குலு சுலு சுலு ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் ஐம் க்லீம் ஐந்த்dரீ மஹேந்த்dரீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha குலு குலு சுcuலு சுcuலு ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப்பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ஐந்த்ரீ, மஹேந்த்ரீ - மஹா+ஐந்த்ரீ இவள் இந்திரனின் ஒரு மனைவி.
• பாதாள அஞ்சனம் - இந்த அஞ்ஜனத்தை கண்ணிமைகளில் பூசிக்கொண்டு நிலத்தைப் பார்க்க, பூமியின் நிலப்பரப்புக்கு கீழுள்ளதெல்லாம் கண்ணுக்குத் தெரியும்.
• நிகுண்டீ nirguṇḍī - நொச்சி.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக