பறந்து செல்ல ஸித்து விளையாட்டு. ஆகாசகமனம்

பறந்து செல்ல ஸித்து விளையாட்டு. ஆகாசகமனம்

இரவு ஒரு மலைக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 29 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 30வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய சந்த்ரலேகா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் வேலைக்காரீயாகயிருந்து சகலவேலைகளையும் ஸாதகருக்கு செய்வாள். ஆகாசகமனம் ஸித்தியும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

சந்த்ரலேகா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் சந்த்ரலேகே ஆகச்ச ஆகச்ச து து து து ஹ்ரீம் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், ஹ்ரீம், சந்த்ரலேகே, ஆகச்ச ஆகச்ச - வா வா, து து து து ஹ்ரீம் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் சந்த்dரலேகேkhe ஆகgaச்cசcha ஆகgaச்cசcha து து து து ஹ்ரீம் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும், தேன், தயிர், செவ்வரளிப்பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குணி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்ககள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• சந்த்ரலேகா என்றால் நிலவுடையஉடலமைப்பு என்று பொருள். அதாவது அவளுடைய உடல் கட்டமைப்பு அழகானது,
• ஆகாசகgaமனம் - ஆகாசத்திற்கு போய்வரும் ஸித்தி. ஆகாசத்தில் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக