ஏன் எனக்கு மந்திரம் சொல்லியும் ஸித்தி வரவில்லை காரணம் என்ன?

ஏன் எனக்கு மந்திரம் சொல்லியும் ஸித்தி வரவில்லை காரணம் என்ன?

நீங்கள் தொலைகாட்சிலோ அல்லது காணொளியிலோ சிலர் சொல்வதை பார்த்து இருப்பீர்கள் "மந்த்ரம் சொன்னேன் ஸித்தி கிடைத்தது"என்று. இதெல்லாம் சும்மா பொய் கதை.

மந்த்ர ஸித்திக்கு மிக மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை.
1. குருவிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
2. நீ ஜபம் செய்த மந்த்ரத்தில் 1/10 பங்கை ஹேமம் செய்ய வேண்டும். அதாவது நீ ஒரு லட்சம் ஜபித்திருந்தால் 10 ஆயிரத்தை ஹேமம் செய்ய வேண்டும். ஹேமம் செய்வதற்கான பருவகாலம், திதி, கிழமை சரியாய் இருக்க வேண்டும். அப்பொது தான் மந்த்ரத்தில் முழுமையான ஸித்தியை பெறமுடியும்.

உதாரணத்துக்கு :
சாந்தி கர்மம் : பருவகாலம் - ஹேமந்தகாலம் (காரத்திகை. மார்கழி). திதி - ஏகாதசி (வளர்பிறை) அல்லது பௌர்ணமி. கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
ஆகர்ஷண கர்மம் : காலம் - இளவேனிற்காலம் (பங்குனி. சித்திரை). திதி - திருதியை(வளர்பிறை) அல்லது திரயோதசி (வளர்பிறை). கிழமை - சனி. இப்படி பல கர்மங்கள் இருக்கின்றன .....
அந்தந்த கர்மங்களுகுரிய பருவகாலம், திதி, கிழமை இம் மூன்றும் பார்த்து ஹேமம் செய்யயாவிட்டால் ஒரு போழுதும் மந்த்ரத்தில் ஸித்தி வரவே வராது 100% உத்ரவாதம்.

மந்த்ரத்தில் எல்லோருக்கும் ஸித்தி வருமா? அந்த அஸூர குலத்தில் பிறந்த ராவணனுக்கே ஸித்தி கிடைக்கும் போது, ஏன் நமக்கு கிடைக்காது? சரியாகச் செய்தும் ஸித்தி கிடைக்கவில்லையா? இது கோடியில் ஒருவருக்கு இப்படி நேரிடலாம் அப்போது நீ "7 உபாயம்" கவனமாக செய்து ஸித்தியை அடைந்து விடலாம். கவலைப்படத் தேவையில்லை.

அந்த உபாயங்கள் 1. ப்ராமண - அலைய வைத்தல் 2. ரோதன - நிற்பாட்டுதல் 3.வசிய 4. பீதன - அடக்குதல் 5. சோஷண - காய்ந்து போதல் 6. போஷண - ஊட்டமளித்தல் 7. தாஹன - எரித்தல் இவைகளை பீஜ் மந்த்ரத்தை கொண்டு முறைப்படி செய்ய வேண்டும். இதன் பின்னர் மந்த்ர ஸித்தி கிடைக்கும். இதில் ஒரு சந்தேகமும் இருக்கலாகாது. இந்த 7 உபாயத்தை பற்றி சிவபொருமான் "உத்தீச தந்த்ர" என்ற புத்தகத்தில் ராவணனுக்கு விபரமாக விளக்குகிறார்.

மந்த்ர ஸாதனையின் போது ஹோமத்தில் போடும் பொருட்கள், வாசனை பொருட்களுக்கு ஏற்றபடி ஸித்தியின் வீரியம் மாறுபடும். இதிலும் கவனம் தேவை.

மற்றது மந்த்ரத்தின் பொருள் தெரியாமல் ஒருபோதும் மந்த்ரம் சொல்லக்கூடாது. ஏனென்றால் மந்த்ரத்தில் எழுத்து பிழைகள் இருக்கலாம்.

உச்சரிப்பு மிகவும் சரியாக இருக்க வேண்டும்.
"க"வரிசை - ka, kha, ga, gha.
"ச"வரிசை - śa, sa, ṣa, c, cha, ja, jha.
"ட"வரிசை - ṭa, ṭha. ḍa, ḍha.
"த"வரிசை - ta tha da dha.
"ப"வரிசை - pa, pha, ba, bha.
சில உயிரேழுத்துகள் - ṝ, lṛ.

ம்ரோம் த்dரோம் என்று ஜபம் செய்ய ஸர்வ ஜனம் வசியமாகும் அல்லது நிஃ என்று ஜபம் செய்ய யக்ஷிணிகள் வசியமாவார்கள். இப்படிப்பட்ட மந்த்ரங்கள் பல உள்ளன அவை "ஸித்த யோக"மந்த்ரங்கள் என்று அழைக்கப்படும். சும்மா ஜபம் செய்ததால் ஸர்வ ஜனமும் வசியமாகாது யக்ஷிணகளும் வசியமாகமாட்டார்கள். அதனால சும்மா ஜபம் செய்து காலத்தை போக்காது அனுபவம் வாய்ந்த ஆசானை கண்டு பிடித்து சரியான முறையில் பயிலவும். உன் உடம்பில் " பிராணசக்தி " "மந்த்ரசக்தி " இருக்க வேண்டும்.

அந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவனுக்கு தான் ஸித்தி கிடைக்கும், இந்த ராசியில் பிறந்தவருக்கு தான் ஸித்தி கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் போலி குரு வேடம் பொட்வர்களின் ஒரு சாட்டு கதை.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2017 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக