மஹேச்வர ஸாதன
இரவு ஸாதகர் சுடுகாட்டுக்கு போய் 80 ஆயிரம் மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி 80 நாட்களில் ஜபம் செய்து. 81 வது நாள் மஹேச்வரனுக்கு சிறப்பு பூஜை செய்து, தக்ஷிணா மூர்த்தி சிலை வைத்து, எல்லாத் தெய்வங்களுக்கும் உதாரபலி கொடுத்து, நைவேத்தியம் வைத்து, எருக்கன் கட்டைகளை வைத்து; சொக்கலை பூ, நாக பூ, அகில் இவைகளை சம அளவு எடுத்து, பொடி செய்ததை போட்ட வண்ணம் எட்டாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய, மஹேச்வரன் கூச்சலிட்டு சத்தம் போடுவான். அதற்கெல்லாம் ஸாதகர் கொஞ்சமும் கூட பயப்படக் கூடாது. அந்த நேரம் மஹேச்வரன் ஸாதகர் முன் தோன்றுவான். அவனுக்கு தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, வாசனை கலந்த நீரினால் அர்க்யம் கொடுக்க, அவன் " உனக்கு என்ன வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். " ஸர்வ மஹேச்வரிய ஸித்திகளையும் எனக்கு தா " என்று ஸாதகர் சொல்ல வேண்டும். அந்த வரத்தை தந்து விட்டு மறைந்து விடுவான். ஸாதகர் அப்ராஜித் ஆவான், சகாவரம் கிடைக்கும்.
மஹேச்வர ஆவாஹன மந்த்ரம்:
ஒம் ஆயாஹி மஹேச்வர பூதாதிபதி ஸ்வாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஒம், ஆயாஹி - வா, மஹேச்வர, பூதாதிபதி - பூதங்களுக்கு அதிபதி, ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஒம் ஆயாஹி மஹேச்śவர பூbhūதாதிdhiபதி ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - எருக்கன் கட்டை. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி, திருதியை, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.
• மஹேச்வரன் - சிவன். சிவனின் இன்னுமொரு ஸாதனை மஹாதேவ ஸாதனையை பார்க்க இங்கே தட்டவும்.
• மஹேச்வரன் துள்ளிக் குதித்து, நடனமாடி குழப்படி நடத்தையை காட்டினால், உடனே ஸாதகர் "ஹூம் " என்ற மந்த்ரத்தை முணுமுணுத்தபடியிருக்க மஹேச்வரன் சாந்தமாகி விடுவான்.
• அப்ராஜித் - ஸாதகரை எவராலும் வெல்ல முடியாது.
• நாக பூ, நாக மரம், புன்னாகம் தமிழ். சமஸ்கிருதம் - நாக புஷ்ப, நாககேசர.
• சொக்கலை பூ, கன்னிக்கொம்பு தமிழ். சமஸ்கிருதம் - பிரியங்கு.
• ஒரு பலி கொடுத்து அதை எல்லா தெய்வங்களும் எற்று கொள்ளும்படியாாக சொல்ல வேண்டும்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக