காமதேனு ஸாதன
இரவு ஸாதகர் ஒரு காட்டுக்குச் சென்று குங்கிலிய தூபம் போட்டபடி பத்தாயிரம் மந்த்ரம் ஜபம் செய்து, மீண்டும் லட்ச மந்த்ர ஜபம் செய்து, இன்னுமொரு தடவையும், ஒரு லட்ச மந்த்ர ஜபம் செய்து. அகில் மரத்தால் செய்யப்பட்ட சின்ன காமதேனு சிலையை வைத்து. புல், வைக்கோல், தேன், நெய் போட்ட வண்ணம் அகில் கட்டைகளை வைத்து ஏழாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய, பழுப்பு நிறமான பசு, காமதேனு ஸாதகர் முன் வருகை தருவாள். ஒருவேளை வராவிட்டால் புல், நெய் போட்டபடி இருபதாயிரம் ஹோமம் மீண்டும் செய்ய, கண்டிப்பாக வருகை தருவாள். வந்ததும் ஸித்தியாகிவிடும். ஒவ்வொரு நாளும் பல ஆயிரமாண்டுகளுக்கு, பால் தருவாள்.
காமதேனு ஆவாஹன மந்த்ரம் :
ஓம் காமதேனு ஆகச்ச ஆகச்ச ஸமயமனுஸ்மர ஹூம் பட் ஸ்வாஹா.
மந்த்ரதின் பொருள் :
ஒம் காமதேனு, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸமயமனுஸ்மர - சமய உடன்படிக்க்கைப்படி, ஹூம் பட் ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஒம் காமதேdeனு ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸsaமயமனுஸ்sமர ஹூம் பphaட் ஸ்sவாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பழங்கள், கரும்பு, நெய், தானியங்கள், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், புல், வைக்கோல், தேன் ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - அகில் கட்டை. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி, தேய்பிறை திருதியை, தேய்பிறை சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• காமதேனு - தேவ லோகத்தில் வசிக்கின்ற பசுவாகும்.
• ஏழாயிரம் மந்த்ரத்துக்கு , ஏழாயிரம் தடவை புல், வைக்கோல், தேன் நெய் போட வேண்டும். அதாவது ஏழாயிரம் ஆஹுதி.
• 2.1 லட்சம் மந்த்ரம் ஜபிக்க கிட்டத்தட்ட 4 மாதங்கள் எடுக்கும். பின்னர் ஹோமத்துக்கு இரண்டு மாதங்கள் எடுக்கக் கூடும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக