சில சுவாரசியமான ஸித்திகள்

சில சுவாரசியமான ஸித்திகள்

1. பாதுகா ஸாதன, பாதுகா ஸித்தி அல்லது பாதுகா கதி :
இது ஒரு அற்புதமான காலணி அல்லது ஒரு வகை மூலிகை மையை காலுக்கு பூசிக்கொண்டு பூமியில் எந்த இடத்தற்கும் அடுத்த கணத்தில் செல்லலாம். பிரபஞ்சத்துக்கு போகலாம். நீர் மேல் நடக்கலாம் தரையில் நடப்பதை போல், உலாவித்திரியலாம். சில பாதுகா மூலம் நீர் மேல் மட்டுமே நடக்கலாம், சில பாதுகா மூலம் பூமியில் மட்டும் தான் போகலாம். சில பாதுகா மூலம் பூமி பரபஞ்சம் நீர் இம் மூன்றும் சாத்தியமாகும். இதை குறிப்பிட்ட ஸாதன மூலம் தேவியிடமிருந்து நேரடியா இந்த பாதுகாவை பெற்று கொள்ளலாம். அல்லது இதற்கு உரிய மையை தயாரித்து இந்த ஸித்தியை அடைய முடியும். இவ் இரண்டு முறைகள் மூலம் பாதுகா ஸாதன செய்வது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

2. கட்க ஸித்தி khaḍga :
இது ஒரு அற்புதமான வாள் இந்த வாளை எதிரியை நினைத்து வீச வாள் பறந்து சென்று கொன்று விட்டு வரும். அல்லது எதிரி ராணுவத்துக்கு முன் வாளை சுழட்ட அவர்களின் தலைகள் தொப்பு தொப்பு என்று கீழே விழும். மஹிஷமர்தினீ ஸாதன மூலம் இந்த வாளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பதினைந்து நித்தியாக்கள் உள்ளனர், நீலபதாகா என்பவள் பதினோராவது நித்யா. நீலபதாகா ஸாதன மூலம் இந்த வாளை பெற்றுக் கொள்ளலாம். இவ் இரண்டு முறைகள் மூலம் வாளை பெற்று கொள்வது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

3. அஞ்சன ஸித்தி அல்லது திலக ஸித்தி :
எல்லா வித மை வகைகள் செய்வதில் ஸித்தி பெற்று இருத்தல்.

4. நிதி க்ரகணம் nidhi grahanam - புதையல் இருக்கும் இடங்களை கண்டு பிடித்தல்.

5. வேதாள ஸித்தி :
வேதாளத்தை அடிமையாக்கி தன் இஷ்டம் போல் வேலை வாங்குதல். வேதாள ஸாதனையை பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

6. பாதாள ஸித்தி :
பூமிக்கு உள்ளே எங்கு வேண்டுமானாலும் போய் வருதல்.

7. கௌதூஹல, கௌதுக, குதூஹல :
இந்த ஸித்தியானது, விசித்திரமான ஒன்றை செய்து காட்டுதல், வியக்கத்தக்கதை செய்து காட்டல்.
 
8. குடிகா ஸித்தி gutika :
மருந்தது குளிசை. எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்த கூடியது. அல்லது சிலவகை குளிகைகளிருக்கின்றன உண்டவுடன் ஸித்திகளைப் பெறலாம்.

9. கேசர ஸித்தி khecara :
வானத்தை நோக்கி பறத்தல்.

10. இந்த்ரஜாலம் அல்லது மாயாஜாலம் :
அமானுஷ்யத்தை உண்டாக்கல், செய்து காட்டல்

11. அந்தர்தாண ஸித்தி antardhāna அல்லது அத்ரிசய ஸித்தி adṛśya :
மறைதல். தான் மறையலாம் அல்லது வேறு ஒரு வரை மறைக்கலாம். மானிடர்களின் கண்களுக்கு மட்டுமல்லாது அந்த மும்மூர்த்திகளின் கண்களுக்கு கூட தெரியாமல் மறைய கூடிய விதங்களுமுண்டு.

12. பரதிலோமகர்ஷண அல்லது பரதிகுளம் வாஹய :
ஆறு பாயும் திசைக்கு எதிராக ஆற்றை பாய வைத்தல்.

13. மூன்று உலகத்தில் என்ன என்ன இருக்கின்றனவோ அவைகளை தன் விருப்பத்தின் பேரில் அடுத்த கணத்தில் பெற்றுக் கொள்ளல்.
 
14. வாக் ஸித்தி :
சொல்வதின் மூலம் அடுத்த கணமே செயல்படுத்துதல். உதாரணத்திற்கு ஒருவரை பார்த்து இறந்து போ என்றால் அடுத்த கணமே இறந்து போவான்.
 
15. ஒரே ஒரு மந்த்ரத்தின் மூலம் தேவ, யக்ஷ, பூத, நாக, தானவ, கின்னர, கந்தர்வ, ராக்ஷஸ, அரக இவர்கள் எல்லாரையுமே ஆவாகணம் செய்தல் அல்லது அடிமையாக்கிக் கொள்ளுதல்.
 
16. ஒரே ஒரு மந்த்ரத்திலோ அல்லது நினைத்த மாத்திரத்தில் தேவ, யக்ஷ, பூத, நாக, தானவ, கின்னர, கந்தர்வ, ராக்ஷஸ, அரக இவர்களை கொல்லுதல்.
 
17. கூடு விட்டு கூடு பாய்தல் :
ஏற்கனவே ஒரு பதிவில் மந்த்ர செய்முறை விளக்கபட்டுள்ளது.
 
18. தேவ குலம், யக்ஷ குலம், பூத குலம், நாக குலம், தானவ குலம், கின்னர குலம், கந்தர்வ குலம், ராக்ஷஸ குலம், அரக குலம் இவர்களில் ஏதாவது ஒரு குலத்திரை அடிமையாக்குதல் அல்லது அவர்களுடை யோகாக்களை களவு செய்தல்.
 
19. காமரூப :
தான் நினைத்தபடி ஒரு அல்லது பல உருவம் எடுத்தல்.

20. ஒருவனை யானை, குரங்கு, மான்.... மிருகமாக மாற்றுதல். மிருகங்களை மனிதனாக மாற்றுதல்.

21. ம்ர்ரிதஸம்ஜிவண ஸித்தி mṛtasamjivana - சொத்தவர்களை உயிர்பித்தல். இச் ஸித்தியை பெறுவது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

22. வஜ்ராஸ்த்ரம், அக்னிஅஸ்த்ரம், ப்ரஹமாஸ்த்ரம் இப்படிப்பட்ட ஆயுதங்களை பெற்று கொள்ளும் ஸித்தி இச் ஸித்தியை பெறுவது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக