அஷ்டகந்தம் என்றால் என்ன?
அஷ்டகந்தம் (எட்டு+வாசனை) என்றால் எட்டு விதமான வாசனைப் பொருட்கள் சேர்ந்த ஒரு கலவையாகும். யந்திரங்கள் கீறுவற்கு, இதனுடன் நீர் கலந்து மை போல் செய்து, பயன்படுத்தப்படுகிறது. தெய்வ ஆவாஹனம் செய்வதற்கு இது ஒரு மிக முக்கியமான பொருள். கடைகளில் போலி விற்பனை செய்வதால் ஸாதகர் தானே தயாரித்துக் கொள்ளும் படியாக எழுதியுள்ளேன்.
அஷ்டகந்தம்
1. வெள்ளை சந்தனம் 100கிராம்.
2. கார்அகில் அல்லது அகில் 100கிராம்.
3. தேவதாரம் 100கிராம்.
4. சடாமாஞ்சில் 100கிராம்.
5. கற்பூரம் 100கிராம்.
6. கஸ்துரீ 1 - 5கிராம்.
7. கோரோசனம் 1 - 5கிராம்.
8. குங்குமப்பூ 5 - 10கிராம்.
மேலே சொல்லப்பட்ட எட்டு வகை வாசனைப் பொருட்கள் அஷ்டகந்தமெனப்படும். புனுகு, யானை மதநீர்; அசல் கிடைக்கக் கூடியதாக இருந்தால் இவை இரண்டையும் கொஞ்சமாக எடுத்து அஷ்டகந்தத்துடன் சேர்த்து உபயோகிக்க அதன் சக்தி பல மடங்கு அதிகரிக்கும். மேலே சொன்ன எல்லாம் பொடிகளே, கஸ்த்துரீ பொடியாகவோ தையமாகவோ திரவமாகவோ சேர்த்து உபயோகிக்களாம்.
ஆவாகண ஸாதனைக்கு சிறப்பான ஸமக்ரி செய்முறை. மேலே சொன்ன அஷட்கந்தத்துடன் கீழே சொல்லப்பட்டுள்ள 19 விதமான வானை பொருட்களின் கலவையாகும். ஒட்டு மொத்தமாக 27 வாசனைப் பொருட்கள்.
1. பூலாங்கிழங்கு 25கிராம்.
2. பெருங் கோரைக்கிழங்கு 25கிராம்.
3. தாளிச்ச பத்திரி 25கிராம்.
4. திரவியப்பட்டை 25கிராம்.
5. கோரைக்கிழங்கு 25கிராம்.
6. விளாம் பிசின் 25கிராம்.
7. இலவம் பிசின் 25கிராம்.
8. ஆலம் பிசின் 25கிராம்.
9. அரசம் பிசின் 25கிராம்.
10. குங்கிலியம் 50கிராம்.
11. சாம்ராணி 50கிராம்.
12. பெருமரப் பிசின் 25 கிராம்.
13. செங்கருங்காலி பிசின் 25கிராம்.
14. சுராலை பிசின் 50கிராம்.
15. கமகமம் பிசின் 50கிராம்.
16. லம்மியம் பிசின் 50கிராம்.
17. இளமஞ்சிள் பிசின் 25கிராம்.
18. ஆச்சர பிசின் 25கிராம்.
19. அதிரசம் பிசின் 25கிராம்.
1-13 வரை நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஆன்மீகக் கடைகளிலோ வாங்கிக் கொள்ளலாம். 14-19 இணையகத்தில் வாங்கிக் கொள்ளலாம். இந்த 27 மூலிகை கலவை கிட்டத்தட்ட 1150 (500 + 650) கிராம் வரும். இது ஆவாஹன ஸாதனையின் போது 800 மந்த்ரம் ஹோமம் செய்ய போதுமானது. 1-19 வரை எதாவது ஒன்று கிடைக்காவிட்டால் வேறு ஒன்றை கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.
எல்லா ஆவாஹன ஸாதனையிலும் "ஸமக்ரி - அஷ்டகந்தம் குங்கிலியம் " என்று எழுதப்பட்டிருக்கும், அதன் அர்த்தம் இந்த 27 வாசனை பொருட்களின் கூட்டை ஹோமத்தின் போது உபயோகிக்க வேண்டும்.
• கார்அகில் அல்லது அகில் தமிழ். கார்அகில் என்றால் கருப்பு அகில், இது வழமையான அகிலைவிட சிறப்பானது. சமஸ்கிருதம் - அகgaரு, அகுguரு. ஆங்கிலம் agarwood.
• தேவதாரம், தேவதாரு தமிழ். சமஸ்கிருதம் தேdeவதாdāரு.
• சடாமாஞ்சில், முடிக்கத்தை தமிழ். சமஸ்கிருதம் ஜடாமாஞ்ஸீ. ஆங்கிலம் nardostachys jatamansi
• குங்கிலியம் தமிழ். சமஸ்கிருதம் guggula. ஆங்கிலம் myrrh tree. தாவரவியல் பெயர் commiphora wightii.
• சாம்ராணி தமிழ். சமஸ்கிருதம் kundara, śallakī. ஆங்கிலம் frankincense. தாவரவியல் பெயர் boswellia serrate.
• பெருமரம் தமிழ். சமஸ்கிருதம் aralu, atisarahita. ஆங்கிலம் malabar tree of heaven, halmaddi resin. தாவரவியல் பெயர் ailanthus triphysa, ailanthus malabarica.
• செங்கருங்காலி பிசின் தமிழ். சமஸ்கிருதம் khadira rasa. ஆங்கிலம் black cutch tree resin. acacia catechu.
• சுராலை தமிழ். சமஸ்கிருதம் சைśaiலஜ. ஆங்கிலம் benzoin, sumatra benzoin tree.
• கமகமம் பிசின் தமிழ் அருமையான வாசனையை தரக் கூடிய பிசின். ஈரான், அதனுடனுள்ள அண்டை நாடுகளில் வளரும் ஒரு மரத்திலிருந்து எடுக்கப்படுவது. ஆங்கிலம் galbanum ferula gummosa.
• லம்மியம் பிசின் தமிழ். நல்ல வாசனை தரக் கூடிய பிசின். சமஸ்கிருதம் துருஷ்க turuska. ஆங்கிலம் labdanum, ladanum, ladan, ladanon துருக்கி, எகிப், சைப்பிரஸ், கிரிஸ், ஜோர்டான், இஸ்ரேல், பலஸ்தினியம், லெபனான், சீரியா இந்த நாடுகளில் கிடைக்கக் கூடியது. ஆங்கிலம் cistus creticus, cistus ladanifer.
• ஆச்சர தமிழ். சமஸ்கிருதம் தேவவேஷ்ட, ரால. ஆங்கிலம் shala tree resin, shorea robusta.
• இளமஞ்சிள் பிசின் தமிழ். ஆங்கிலம் sandarac, resin from tetraclinis articulata.
• ஸூரசம் தமிழ். சமஸ்கிருதம் surasa. ஆங்கிலம் resin of kapok tree, ceiba pentandra.
• யானை மதநீர் - ஆண் யானை மதம் பிடிக்கும் போது அல்லது க்ஷோம்பணம் ஆகும் போது அதன் காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் இருந்து வரும் திரவம் யானை மதநீர் எனப்படும். சமஸ்கிருதம் கஜமத.
• ஓர்க்கோலை, மலக்கனம், கற்பூரமணி தமிழ். சமஸ்கிருதம் த்ர்ரிணமணி, சூகாபுட்ட. ஆங்கிலம் amber. தேன்மெழுகை அடிப்படையாகக் கொண்டு சுராலை, சந்தனம், சம்ராணி, தேன், வெனிலா மற்றும் வாசனை பெருட்களை கலந்து செய்யப்படுவது. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• பசுமரப் பிசின் தமிழ். dammer gum, dipterocarpaceae என்ற மரக் குடும்பத்திலிருந்து பெறப்பட்ட பிசின், முக்கியமாக shorea அல்லது hopea வகையைச் சேர்ந்தது தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• ஆற்றுப்பூவரசு பூ தமிழ். சமஸ்கிருதம் பிண்டாḍāரக புஷ்ப. ஆங்கிலம் mallotus nudiflorus. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• நிலஸம்பங்கி தமிழ். ஆங்கிலம் frangipani. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• நாகபூ, நாக மரம், புன்னாகம் தமிழ், சமஸ்கிருதம் நாக புஷ்ப, நாககேஸர. ஆங்கிலம் mesua ferrea. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• சண்பகம் மலர் தமிழ். சமஸ்கிருதம் சchaம்பக புஷ்ப. ஆங்கிலம் champa flower, magnolia champaca. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• கடம்பு தமிழ். சமஸ்கிருதம் kadamba. ஆங்கிலம் neolamarckia cadamba. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• சொக்கலை பூ, கன்னிக்கொம்பு தமிழ். சமஸ்கிருதம் பிரியங்கு. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• நாகலிங்கபூ தமிழ். ஆங்கிலம் couroupita guianensis. தகவலுக்காக எழுதியுள்ளேன்.
• பச்சசை கற்பூரம், வெள்ளை சந்தனம், குங்குமப் பூ, கஸ்த்துரீ இந்த நான்கும் ஸர்வகந்தம் என்று அழைக்கப்படும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.