ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வத்துடன் விடைபெறுதல்/பிரியாவிடை செய்வது எப்படி?

ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வத்துடன் விடைபெறுதல்/பிரியாவிடை செய்வது எப்படி?

ஆவாஹனம் செய்யப்பட்ட தெய்வத்துடனான முழு உறவுகளையும் நிறுத்திக் கொள்ள விருப்பப்படுபவர்களுக்காக, இந்த ஸாதனையாகும். அதாவது ஒருவர் ஒரு தெய்வத்தை ஆவாஹனம் செய்து வைத்திருக்கிறார், ஆனால் சில வருடங்கள் கழிய அந்தத் தெய்வம் தேவையில்லை என்றெண்ணுகிறார், அவருக்கான ஸாதனையாகும். இப்படி ஒருவரும் செய்வதில்லை ஆனால் இதற்கும் வழிமுறைகளுண்டு என்பதற்காக எழுதியுள்ளேன்.

பெண் தெய்வமாகயிருந்தால் மந்த்ரம் :
"ஓம் ஹ்ரீம் கச்ச கச்ச "_______" புனராகமனாய ஸ்வாஹா".

ஆண் தெய்வமாகயிருந்தால் மந்த்ரம் :
"ஓம் கச்ச கச்ச "_______" புனராகமனாய ஸ்வாஹா"

கோர (பயங்கர) தெய்வமாகயிருந்தால் மந்த்ரம் :
"ஓம் கச்ச கச்ச "_______" புனராகமனாய ஹூம் பட் ஸ்வாஹா"

"_______" இந்த இடத்தில் எந்த தெய்வத்தோடு விடை பெறுகிறீர்களோ அந்தத் தெய்வத்தின் பெயரை வைத்து ஜபிக்கவும். ஹோமம் மட்டும் செய்தால் போதும். ஆவாஹனம் செய்த போது ஹோமம் எந்த மாதம், திதி, கிழமையை பயன்படுத்தினீர்களோ அதே மாதம், திதி, கிழமையை விடை பெறுவதற்கும் பயன்படுத்தவும். அதே போல் மந்த்ர எண்ணிக்கையும். தூபதீபம் காட்டி, அர்க்யம் கொடுத்து, இடதுகை பெருவிரலை உயர்த்திகாட்டி முத்திரை காட்டவும். இத்துடன் அத் தெய்வம் மறைந்துவிடும்.

• உச்சரிப்பு -"ஓம் ஹ்ரீம் கgaச்cசcha கgaச்cசcha _______ புனராகgaமனாய ஸ்sவாஹா"
• பொருள் - கச்ச கச்ச - போ போ, புனராகமனாய - திரும்பி (போ).

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக