ஞமளீ ஸாதன

ஞமளீ ஸாதன

இரவு ஓரு மலைக்கு மேல் போய் குகை போல் உள்ள இடத்தை தேர்வு செய்து  யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்ய வேண்டும், 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஞமளீ ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காாட்டி அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள் அதற்கு ஸாதகர்  '' நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகரின் விசுவாசமான அடிமையாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்வாள். ஸாதகரின் கட்டளைப்படி, இவள் எதிரி நாட்டு ராணுவத்தையும், ராணுவ தளபாடங்களை சின்னா பின்னமாக்கி ஓட ஓட விரட்டி வைப்பாள். எதிரி நாட்டு ராணுவத்தை சூனியப் பலாயம் செய்வாள்.

ஞமளீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஞமளீ சத்ருஸைன்யவிநாசினீ ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய க்ரோதராஜா ஆஞாபயதி ஹூம் பட் ஸ்வாஹா

உச்சரிப்பு மந்த்ரம் :
ஓம் ஞமளீ சத்ருஸைsaiன்யவிநாசிśiனீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸsāதdhaய க்ரோதdhaராஜா ஆஞாபயதி ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஞமளீ, சத்ருஸைன்யவிநாசினீ - எதிரி ராணுவத்தை நாசம்செய்பவளே ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் ஸாதய - காரியம் ஸாதிப்பாய், க்ரோதராஜாவின் கட்டளை ஹூம் பட் ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும்  ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• சில வேளை தவறாக குட்டிவேதாளம் என்று அழைப்பதுண்டு.
• ஞமளீ இவள் அஸுர குலத்தை சேர்ந்தவள்.

• பலாயம் - உயிருக்கு பயந்து, ஆபத்தை எதிர்கொண்டு தப்பியோடுதல்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக