பிசிதாகர்ஷிணீ ஸாதன
சுடலைக்கு இரவு போய் யந்த்ரம் வரைந்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து. 8ஆம் நாள் மீன், கருத்த கிடா மாமிசம் எட்டு திக்குகளிலும் தன்னை சுற்றி படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, பிசிதாகர்ஷிணீ அழகான பிரம்ம ரூபத்தை, உள்வாங்கிய ரூபத்தில் ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காட்டி, முழுமையாக ரத்தம் நிரம்பிய கபாலத்தில் அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள். அதற்கு ஸாதகர் '' எனக்கு தங்கம் தா " என்று சொல்ல வேண்டும். அவள் அஷ்டபலம் தங்கம் தருவாள். அந் நேரத்தில் இன்னும் கொஞ்ச மாமிசம் அவளுக்கு கொடுக்க வேண்டும். ஸாதகர் தனது விருப்பங்களை தைரியமாக கூறத் தவறினால்; ஸாதகரின் கண்களும், மண்டை ஓடும், வயிறும் வெடித்து, அதன் விளைவாக ஸாதகருக்கு மரணம் ஏற்படும். ஸாதகர் பயப்பட்டால் ஸாதகரை அழித்து விடுவாள். பிசிதாகர்ஷிணீ ஸாதனையை உதாசீனம் செய்து வராதபட்சத்தில் பிசிதாகர்ஷிணீ கொல்லப்படுவாள்.
பிசிதாகர்ஷிணீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் பிசிதாகர்ஷிணீ த்ரிதராம் ஹிதார்தய ஓம் ஹூ ஹூ ஹூ க்ர்ரிஹன மம்ஸம் சித்திம் மே ப்ரயச்ச ஸ்வாஹா.
மந்த்ரம் உச்சரிப்பு :
ஓம் பிசிśiதாகர்ஷிṣiணீ த்dரிதdaராம் ஹிதார்தthaய ஓம் ஹூ ஹூ ஹூ க்gர்ரிṛஹன மம்ஸம் சிśiத்dhதிdhiம் மே ப்ரயச்chசcha ஸ்sவாஹா.
மந்த்ரதின் பொருள் :
பிசிதாகர்ஷிணீ, த்ரிதராம் ஹிதார்தய - தரித்திரத்தைப் போக்கி செல்வத்தை உண்டாக்கு, ஓம் ஹூ ஹூ ஹூ - ஓம் வா வா வா, க்ர்ரிஹன மம்ஸம் - இறைச்சியை சாப்பிடு, சித்திம் மே ப்ரயச்ச - எனக்கு ஸித்தி தா, ஸ்வாஹா.
மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவள் தயங்காமல் உடனே வருவாள்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• பிசிதாகர்ஷிணீ மாமிசம் விரும்பி என்று பொருள். இவள் ஒரு பிசாசினீ. இவளின் மறுபெயர் மம்ஸகர்ஷிணீ. இவள் பிசாசகுலத்தை சேர்ந்தவள்.
• அஷ்டபலம் தங்கம் - எட்டு பொற் காசுகள்.
• கருத்த கிடா - கருப்பு ஆண் ஆடு.
• உதாரபலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
ரொம்ப நாளாகிவிட்டது பதிவிட்டு...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி !!! அடுத்த மாதத்திலிருந்து பதிவுகள் வரும்
பதிலளிநீக்குநன்று ...முடிந்தால் உங்கள் email or whatsapp பதிவிடவும் சந்தேகம் கேட்க வேண்டும்...
பதிலளிநீக்கு