கம்பளிகா பிசாசினீ ஸாதன

கம்பளிகா பிசாசினீ ஸாதன

ஸாதகர் சாப்பிடும் உணவை ஒவ்வொருநாளும் தன் வீட்டுக் கூரையில் 21 நாட்கள் வைத்து, 21 நாட்கள் காலைமுதல் அந்திவரை, நாள் ஒன்றிக்கு 1000 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஜபம் செய்ய வேண்டும். 22ஆம் நாள் உதாரபலி கொடுத்து 2100 மந்த்ரங்கள் ஹோமம் செய்ய. அன்று இரவு அழகிய பெண்ரூபத்தில் கம்பளிகா ஸாதகருடைய கட்டிலுக்கு வருவாள். தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரைகாட்டி அர்க்யம் கொடுத்து ஸாதகர் அவளுடன் ஸம்போகம் கொண்டு திருப்திபடுத்த, அவள் ஸாதகருக்கு ஒவ்வொரு நாளும் 25 பொற் காசுகள் தருவாள், ஸாதகர் என்ன கேட்டாலும் அதற்கான விடையை, உடனே ஸாதகரின் காதுகளில் முணுமுணுப்பாள். அன்றில் இருந்து ஸாதகருக்கு வேலைக்காரீயாகி முக்காலம் சொல்லுவாள்.

கம்பளிகா பிசாசினீ ஆவாஹன மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் வஃ சஃ கம்பளிகே ஆகச்ச க்ர்ரிஹ்ண க்ர்ரிஹ்ண பிண்டம் பிசாசிகே ஸ்வாஹா

மந்த்ர உச்சரிப்பு :
oṃ hrīṃ vaḥ caḥ kambalike āgaccha gṛhṇa gṛhṇa piṇḍaṃ piśācike svāhā

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம் வஃ சஃ, கம்பளிகே - கம்பளி உடை உடுத்தியவள், ஆகச்ச - வா, க்ர்ரிஹ்ண - எடு எடு, பிண்டம் - உணவை, பிசாசிகே - பிசாசிகாபெண்ணே, ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளா வெட்டி த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவள் தயங்காமல் உடனே வருவாள்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸாதகர் - யார் தந்த்ர ஸாதனைகளை செய்கிறாரோ, அவர் ஸாதகர் என்று அழைக்கபடுவார். சமஸ்கிருதத்தில் ஸாதக sādhaka.
• சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம் (உலோகம்) - சமஸ்கிருதத்தில் sindura, ஆங்கிலத்தில் red lead.
• கம்பளிகா பிசாசினீ - கம்பளிஉடை பிசாசினீ. இவள் ஒரு பிசாசினீ. இவள் பிசாச குலத்தை சேர்ந்தவள்.
• உச்சரிப்பில் கவனம் தேவை - gṛhṇa க்ர்ரிஹ்ண, āgaccha ஆகச்ச, piśācike பிசாசிகே.
• யந்த்ரமும், அழகான அவள் ரூபமும் கோரோசனமும் gorocana, சுத்தி செய்யபட்டசிகப்பு நாகம் (உலோகம், sindura) கலந்த கலவையால் வரைய வேண்டும்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2017 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக