இந்தரஜித் ஸாதன

இந்தரஜித் ஸாதன

மயானத்திற்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, உதார பலி கொடுத்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய இந்தரஜித் ஸாதகர் முன் உடனே தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு ! அடிமையா இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகி விடுவான். . ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஸ்திரீயை கூட கொண்டு வந்து கொடுப்பன். ஸாதகர் அவன் முதுகில் ஏறி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு போகசொல்ல அங்கு கொண்டுபோய் விடுவான். இந்ரஜித் வராவிட்டால் இந்ரஜித்தின் தலை காய்ந்து வெடித்து சிதறி யமலோகம் போவான். அவனால் ஒரு கல்பத்திற்கு மறுபிறவி எடுக்கமுடியாது.

இந்தரஜித் ஆவாகண மந்த்ரம் :
ஓம் இந்தரஜித்தே மேகந்தனே ஆகர்ஷய ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஒம் இந்தரஜித்தே மேகந்தனே, ஆகர்ஷய - ஆகர்ஷணமாகு, ஆகச்ச ஆகச்ச வா வா, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் இந்தdரஜித்தே மேகghaந்தdaனே ஆகர்ஷṣaய, ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள், மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - செவ்வாய், சனி, ஞாயிறு.

• இந்ரஜித் தோன்றி படுபயங்காட்டுவான், பெரிய கூத்தெல்லாம் ஆடுவான் அதை கணக்கெடுக்காமல் ஸாதகர் "ஹூம் " என்ற மந்த்ரத்தை முணுமுணுத்த வண்ணமிருக்க அவன் ஸாதகருக்கு வசமாகிவிடுவான்.
• இந்தரஜித் இவன் அஸுர குலத்தை சேர்ந்தவன். யுத்த தந்த்ரங்கள் சகலதும் தெரிந்தவன், கையாள்வதிலும் தலைசிறந்தவன்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.
• மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.